நபிக்குப் பின்

கதீர் கும் பிரகடனம்

ஹிஜ்ரி பத்தாம் வருடம் ஹஜ்ஜுடைய காலம் ஹிஜாஸ் பாலைவனங்களில் ஹாஜிகளின் பெருந்தொகையான கூட்டம் ஒன்று குழுமியிருந்தது. அவர்கள் அனைவரும் ஒரே நோக்கத்தடன், ஒரே உணர்வுடன் நடந்து கொண்டிருந்தார்கள்.

இவ்வருட ஹஜ் விசேடமான உஷணத்தினால் தனித்துவம் பெற்றதாக விளங்கியது. முஸ்லிம்கள் தமது பயணத்தை இடைநிறுத்தி, விரைவாகவும் ஆர்வமாகவும் கூடாரங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

சூடான தல்பியாவின் சப்தம் மக்கா பாலைவனங்களில் உயர்ந்து ஒலித்தது. இந்தக் கூட்டத்தினர் மக்காவிலிருந்து ஒருவர் பின் ஒருவராக நெருங்கிக் கொண்டிருந்தனர். ஒரே நிறத்திலான இஹ்ராம் உடை தரித்த பாதையின் புழுதி படிந்த கண்ணீர் வழிந்தோடும் கண்களுடனான இந்த ஹாஜிகள், அல்லாஹ்வின் தோழர், நபிமார்களின் தந்தை இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம் கைகளினால் கட்டப்பட்ட பூமியில் தனது அடியார்களுக்கான புகலிடமாக அல்லாஹ் பிரகடனப்படுத்திய அந்த சங்கைக்குரிய அல்லாஹ்வின் இல்லத்தினது பராமரிப்பில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு, அதனை தவாஃப் செய்து கொண்டிருந்தார்கள்.

நபிகள் பெருமான் அவர்கள், கடல் போன்ற ஹாஜிகளின் பெருக்கத்தினால் நிரம்பியிருந்த மஸ்ஜிதுல் ஹராமின் பக்கம் பார்வையை செலுத்தினார்கள். அவர்கள் அனைவரும், முஃமின்கள் எல்லோரும் சகோதரர்கள் என்ற ரீதியில் அல்லாஹ்வுக்கான சகோதரத்துவத்துடன், நெருக்கமான மலக்குகள் போன்று, பயபக்தியுடனும், பணிவுடனும் தொழுகை, பிரார்த்தனை, மற்றும் வணக்கங்களில் மூழ்கியிருந்தனர்.

இந்த ஹஜ்ஜில் சுமார் 90,000 பேர் கலந்து கொண்டதாக பரீத் வுஜ்தி எழுதுகிறார்.[1] வேறு வரலாற்றாசிரியர்கள் ஹி. 10ம் ஆண்டில் நடந்த ஹஜ்ஜில் சுமார் ஒரு லட்சத்து இருபத்து நாலாயிரம் பேர் மட்டில் கலந்து கொண்டதாகக் குறிப்பிடுவர்.[2]

இந்த மகத்தான நிகழ்வையிட்டு, மகிழ்ச்சியினதும், நிம்மதியினதும் அடையாளங்கள் நபி பெருமானான் முகத்தில் தென்படடன. ஆவர்கள், இந்த நிஃமத்துக்காக அல்லாஹ்வைப் புகழ்ந்து துதி செய்து கொண்டிருந்தார்கள். தமது தூதுத்துவத்தை பரிபூரணமான முறையில் நிறைவேற்றுவதற்கான சக்தியை அவர்கள் பெற்றுவிட்டிருந்தார்கள். ஆயினும், இவற்றோடு, அவர்களது முகத்தில், கவலையினதும், சஞ்சலத்தினதும் பிரதிபலிப்பும் காணப்பட்டது. அண்மைக் காலமாகவே அண்ணலார் ஏதோ கடுமையான சிந்தனையில் அடிக்கடி தன்னை ஈடுபடுத்திக் கொண்டதைக் காண முடிந்தது. சிலவேளை அந்த நிலையானது, அவர்களது செழிப்பான இதழிகளில் இருக்கும் புன்முறுவலையும், நபித்துவ மலர்வையும் மறைக்கக் கூடியதாக எழுந்திருந்தது.

அவர்கள், தமது மரணத்திற்குப் பின்னுள்ளவற்றையிட்டு சிந்தனை வயப்பட்டிருந்தார்கள். இந்த சமூக ஒற்றுமை சீர்குலைந்து விடுமா, அதிலேயுள்ள சகோதரத்துவத்தின் உயிர் நீங்கி விடுமா, முஸ்லிம்கள் தமது முன்னைய அறியாமைக் காலநிலைக்கே மீண்டும் திரும்பிவிடுவார்கள் என்று எண்ணி நபியவர்கள் அச்சம் கொண்டிருந்தார்கள்.

தமது முயற்சிகளை அழிவிலிருந்து பாதுகாக்கக்கூடிய நீதமான, அறிவுமிக்க ஒரு சிறந்த தலைவர் பற்றிய தேவையை அவர்கள் நன்கறிந்திருந்தார்கள்.

அண்ணல் பெருமான், தமது செழிப்பான வாழ்க்கை முழுவதிலும், சிறிய பயணகாலத்திற்காக மதீனாவை விட்டு வெளியேறும் போதெல்லாம் தமது பொறுப்புகளை பொருத்தமான ஒரு மனிதரிடம் ஒப்படைத்து விட்டு அவருக்கு வழிப்படுமாறும், அவருடைய கட்டளைகளை அமுல்படுத்துமாறும் முஸ்லிம்களைப் பணிப்பது வழக்கம்...[3]

நபியவர்கள், ஒருபோதும், மதீனா முஸ்லிம்களை தாம் விரும்பியவாறு நடந்து கொள்வதற்கேற்றாற் போல் சுயவிருப்பு நிகழ்வுகளின் கைகளில் விட்டுச் செல்லவில்லை. அவ்வாறிருக்க, நபியவர்கள், தமது மறைவுக்குப் பின் தமது சமூகத்தை ஒரு சரியான தலைவரை நியமித்து விடாமல் அம்போவென்று விட்டுச் சென்றதாக வர்ணிப்பது உண்மையோடு எவ்வளவு பொருந்தி வரும்.

இவ்விடயத்தை நபியவர்கள் நன்பறிந்திருந்தார்கள். மேலும் இந்த இடம் யாருக்குரியது? இதனை சிறப்பாக சாத்தியமாகக்கூடியவர் யார்? ஏன்பதையும், நபியவர்களின் கிலாபத்தை தனக்கு மட்டுமே கொண்டுள்ள அந்த மனிதர் யார் என்பதையும் அவர்கள் நன்கறிந்திருந்தார்கள்.

இதனைத்தான், நபியவர்களின் நெருங்கிய உறவினர்களான குறைஷி குல முக்கியஸ்தார்களின் சமூகத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் குறிப்பிட்டார்கள், 'நிச்சயமாக இவர் என்னுடைய சகோதரர், என்னுடைய பின்னரிமையாளர், உங்கள் மத்தியில் என்னுடைய பிரதிநிதி. அவருக்கு வழிப்பட்டு, அவருடைய சொல்லை செவிமடுங்கள்' [4]

அவர் தான், இமைப்பொழுதேனும் அல்லாஹ்வுக்கு இணைவைதக்காத, எந்தவொரு சிலைக்கும் தலைசாய்க்காத தூய்மையும் பரிசுத்தமும் மிக்க மனிதர்.

அவர், போர்களில் தன்னை தானமீந்தவர், நபிகளாருக்காக தன்னுயிரை துச்சமாகக் கொண்டவர். இவையணைத்தும், இஸ்லாத்திற்கான உதவியாகவும், உயர்வும் சகல நிலைகளிலுமான பாதுகாப்பும் கொண்ட அதன் கொடிணை உயர்த்துவதற்காகவுமே அமைந்திருந்தன.

அவர்களது பிரவகிக்கும் அறிவு, அல்லாஹ்வின் தூதருடைய அறிவிலிருந்து பெறப்பட்டதாகும். நபிகளாருடைய தீர்ப்புக்குப் பின் முதலாவது சிறந்த தீர்ப்பு அவர்களுடையதுதான்.[5] பிரபலமாக அறியப்பட்ட அவர்தனா ஹஸ்ரத் அலீ இப்னு அபீதாலிப் அலைஹிஸ்ஸலாம்.

ஹஜ்ஜுடைய காலம் முடிவுற ஒவ்வொருவரும் தத்தமது நகரங்களையும், குடும்பத்தினரையும் நோக்கியவாறு சென்று கொண்டிருந்தனர்.

திடீரென ஹாஜிகளை ஒன்று சேருமாறு நபிகளார் விடுத்த அழைப்பு பாலைவனமெங்கும் எதிரொலித்தது. என்ன நடந்தது? ஹஸ்ரத் ஜிப்ரீல் அலைஹிஸ் ஸலாம், நபியவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் வசனத்தை எத்திவைத்தார்கள்: 'தூதரே! உம் இறைவனிடமிருந்து உமக்கு அருளைப் பெற்றதை அறிவித்து விடும். நீர் அவ்வாறு செய்யாவிடில் அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராக மாட்டீர். முனிதர்களிலிருந்து அல்லாஹ், உம்மை இரட்சித்துக் காப்பாற்றிக் கொள்வான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் மக்களை நேரான வழியில் செலுத்தமாட்டான்' (அல்மாயிதா – 67)

மிக உறுதியான வார்த்தைப் பிரயோகத்தினால் அல்லாஹ்விடமிருந்து வந்த இந்த கட்டளையை நிறைவேற்றவே இந்த முஸ்தீபு. இது ஹஸ்ரத் அலீ அவர்களின் கிலாபத்திற்கான உத்தியோகபூர்வ பிரகடனமாக அமைந்திருந்தது. ஏனெனில், நபிகளார் பெருமார் அவர்கள், இதற்கான பொருத்தமான சூழலை எதிர்பார்த்திருந்த நிலையில் இறைகட்டளை வெளியாகியது. எனவே, நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள், சுட்டெரியும் கற்கள் நிறைந்த எரியும் ஹிஜாஸ் பாலைவனத்தில் கதிர்கும் எனுமிடத்தில், இஸ்லாத்தின் உயிரும், அதன் உறுதியும் தெளிவாகும் வண்ணம், முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்றிணைத்தார்கள். அதுதான் கிலாபத்துடைய விடயமாகும்...

தாம் எதற்காக இவ்வாறு ஒன்றிணைக்கப்பட்டுள்ளோம்? எந்த முக்கிய விடயம் நிகழ்ந்துள்ளது என்பதை மக்கள் எவரும் அறிந்திருக்கவில்லை. எனினும், உடனடியாக ஜமாஅத் தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்பட்டு, ளுஹர் தொழுகை நிறைவேற்றப்பட்ட பின், நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள், வானத்திளைவைப் போன்று அதிகரித்திருந்த அந்தக் கூட்டத்தின் மத்தியில் எழுந்து வந்தார்கள். ஒட்டகத்தின் மேலிருக்கையினால் தயார் செய்யப்பட்டிருந்த மிம்பரின் மீது ஏறியவர்களாக நின்றார்கள்.

உஷ்ணம் நிறைந்த அந்த ஹிஜாஸ் பாலைநிலமெங்கும் கூடாரமிட்டிருந்த அமைதியைக் கிழித்து அண்ணலார் உரையாற்றினார். இறைவனைப் புகழந்து விட்டு அண்மித்து விட்ட தம் இறுதி நாட்கள் பற்றிய செய்தியையும் அறிவித்தார்கள். பின்னர் வந்திருந்தோரை விளித்து,

'மக்களே,நீங்கள் என்னைப் பற்றி என்ன கூறுவீர்கள்?' மக்களனைவரும் 'நிச்சயமாக தாங்கள் பிரசாரம் செய்தீர்கள், உபதேசம் புரிந்தீர்கள், தியாகங்களை மேற்கொண்டீர்கள் என்று நாம் சாட்சி கூறுவோம். அல்லாஹ் தங்களுக்கு நற்கூலி வழங்குவானாக'

நபியவர்கள் மீண்டும் அவர்களை நோக்கி, 'அல்லாஹ்வையன்றி வணக்கத்துக்குரியோன் வேறு யாருமில்லையென்றும், நிச்சயமாக முஹம்மத் அவர்கள் அந்த அல்லாஹ்வுடைய அடியாரும் தூதுவருமாவார்கள் என்றும், அல்லாஹ்வுடைய சுவர்க்கம் உண்மையனது, அவனது நரகம் உண்மையானது, மரணம் என்பது உண்மையானது, மறுமை நாள் ஐயமின்றி வரக்கூடியது, அல்லாஹ் கப்றில் உள்ளவர்களை எழுப்புவான் என்றும் சாட்சியம் கூறமாட்டீர்களா? 'என்று வினவினார்கள். அதற்கவர்கள்' ஆம். நாம் அவற்றை சாட்சியம் கூறுகின்றோம்' என்று கூறினர். நபியவர்கள் 'அல்லாஹ்வே! இதற்கு நீயெ சாட்சியாக இருந்து கொள்' என்று பிரார்த்தித்தார்கள்.

இதைச் சொன்ன பின் நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள், ஹஸ்ரத் அலீயின் கரத்தைப் பிடித்து, இருவரதும் அக்குள் பகுதி வெளித்தெரியும் அளவுக்கு மேலுயர்ததியவாறு கூறினார்கள்:

'நிச்சயமாக அல்லாஹ் எனது எஜமான். நூன் முஃமின்களின் பொறுப்பாளன். நூன் முஃமின்களுக்கு அவர்களது அன்மாக்களை விட உயர்ந்தவன். ஆகவே, நான் யாருக்கெல்லாம் பொறுப்பாளனாக இருந்தேனோ, அவர்களுக்கு அலீ பொறுப்பாளராவார். (இதனை மூன்று முறை கூறினார்கள். இப்னு ஹம்பலுடைய அறிவிப்பில் நான்கு தடவைகள் கூறினார்கள்) பிறகு கூறினார்கள்: 'அல்லாஹ்வே! என்னுடைய பொறுப்பாளரை நீ பாதுகாப்பாயாக, அவருடைய எதிரிகள் நீயும் எதிரியாக்கிக் கொள்வாயாக, அவரை விரும்புவோரை நீயும் விரும்புவாயாக. ஆவரை கோபப்படுத்துவோரை நீயும் கோபிப்பாயாக. அவருக்கு உதவி புரிவோருக்கு நீயும் உதவி புரிவாயாக. ஆவரை தாழ்த்துவோரை நீயும் தாழ்த்துவாயாக. ஏப்போதும் அவருடன் உண்மை சுற்றிக் கொண்டிருககச் செய்வாயாக. முனிதர்களே! இதனை இங்கு சமுகம் தந்துள்ளவர்கள், சமுகம் தராதோருக்கு எடுத்துச் சொல்லவும்'

அதன்பின், உடனடியாக ஸிப்ரீல் அலைஹிஸ் ஸலாம் அல்லாஹ்வின் திருவசனத்துடன் இறங்கினார்கள்: 'இன்றைய தினம் உங்களுடைய மார்க்கத்தை பரிபூரணமாக்கி வைத்துவிட்டேன். உங்களுக்காக இஸ்லாம் மார்க்கத்தையும் தேர்ந்தெடுத்து உங்களுக்கு அருட் செய்து அங்கீகரித்துக் கொண்டேன்' (அல்மாயிதா- 3)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் கூறினார்கள்: 'மார்க்கத்தைப் பூரணப்படுத்தி, அருட்கொடைகளை முழுமையாக்கிய அல்லாஹ் மிகப் பெரியவன். இறைவனின் திருப்தி எனது தூதுவத்தில் இருக்கின்றது. எனக்குப் பின் தலைமைப் பொறுப்பு அலீக்கு உரியதாகும்'

இதன்பின். கூட்டத்தினர் அனைவரும் ஹஸ்ரத் அலீ அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து பைஅத் செய்யத் தொடங்கினர். மூத்த ஸஹாபாக்களான அபூபக்கர், உமர் ஆகியோரே முதலில் வாழ்த்தினர். அவர்கள், ஹஸ்ரத் அலீயைப் பார்த்துக் கூறினர்: 'அபூதாலிபின் புதல்வரே! வாழ்த்துக்கள். எங்களதும், ஒவ்வொரு முஃமினான ஆண், பெண்ணினதும் தலைவராக நீங்கள் ஆகிவிட்டீர்கள்' [6]

கதீருடைய ஹதீஸ் அறிவிப்பாளர்கள்

கதீருடைய ஹதீஸின் அறிவிப்பாளர்களின் எண்ணிக்கை சுமார் ஓர் இலட்சத்து இருபதாயிரத்தையும் தாண்டியுள்ளது. 'சமுகமனளித்தோர், சமுகம் தராதோருக்கு இதனை எத்திவையுங்கள்' என்ற நபிகளாரின் கூற்றை செயலில் கொண்ட முஸ்லிம்கள் அந்தச் செய்தியைப் பரப்பலாயினர்.[7];. அத்தோடு , இந்த நிகழ்வானது, அவ்வருடத்திலான ஹஜ் பயண நிகழ்வுகளில் முக்கியமான ஒன்றாக அமைந்திருந்தது.

அதற்கு இருபத்தைந்து வருடங்கள் கடந்த பின்னரும்- அதாவது, ஸஹாபாக்களில் அதிகமானோர்; மரணித்து சொற்பமானோரே எஞ்சிய சந்தர்ப்பத்தில்- ஹஸ்ரத் அலீ அலைஹிஸ் ஸலாம் மஸ்ஜிதுல் கூபாவில் வைத்து, நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களிடமிருந்து கதீருடைய ஹதீஸை செவிமடுத்தவர்களை, அதனைக் கூறும் படியாக வேண்டிக் கொண்டார்கள். அக்கூட்டத்திலிருந்து முப்பது நபர்கள் எழுந்து, அந்த ஹதீஸை எடுத்தக் கூறினார்கள். [8]

முஆவியாவுடைய மரணத்திற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர், அதாவது ஹிஜ்ரி 58 அல்லது 59ஆம் ஆண்டில் இமாம் ஹுஸைன் அலைஹிஸ் ஸலாம் மினாவில் வைத்து பனூஹாஷிம்களையும், அன்ஸாரீன்களையும், ஏனைய ஹாஜிகளையும் ஒன்று சேர்த்தார்கள்.அந்தக் கூட்டத்தினரைப் பார்த்துக் கேட்டார்கள். 'அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறேன், கதீர்கும்முடைய நாளில், நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள், ஹஸ்ரத் அலீயின் தலைமைத்துவத்தை உறுதிப்படுத்தியதையும், சமுகமளித்தோர் சமுகம் தராதோருக்கு எத்திவைக்கும் படியாகப் பணித்ததையும் நீங்கள் அறிவீர்கள்?' என்று கேட்டார்கள். அப்போது அவர்கள் அனைவரும், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக ஆம்' என்று கூறினார்கள். [9]

அஹ்லுஸ்ஸுன்னா உலமாக்கள், தமது கிரந்தங்களில், இந்த ஹதீஸைக் கேட்டு அறிவிப்பு செய்த நூற்றுப் பத்து ஸஹாபிகளின் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.[10] அதேவேளை, சுன்னாவின் மீது மிக்க ஞானமுள்ள அறிஞர்களில் பலர், இந்த ஹதீஸுக்கென தனியான பல நூற்களையும் கோர்வை செய்துள்ளனர்.[11]

ஹதீஸின் பொருள்

இந்த ஹதீஸிலுள்ள மௌலா, வலீ என்ற சொற்பதங்கள், இஸ்லாமிய சமூகத்தின் தலைவர், நபிகளா ரின் பிரதிநிதி என்ற கருத்தையே உணர்த்துகின்றன என்பதை அனைத்து ஆதாரங்களும் தெளிவுபடுத்தியுள்ளன. இதைத் தவிர வேறொரு கருத்தில் இதனைப் புரிந்து கொள்ள முடியாது.

நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள், இந்தப் பிரகடனத்தைச் செய்வதில் உரிய தருணம் வரும் வரை காத்திருந்தார்கள். இறைவனுடைய கட்டளையின் பின்னரே மக்களுக்கு இவ்விடயத்தைத் தெரிவித்தார்கள் என்பதையும் ஏற்கனவே அறிந்தோம்.

இந்நிலையில், நபிகளாரின் இந்தக் கூற்றின் நோக்கம், வெறுமனே நபியவர்களுக்கும் ஹஸ்ரத அலீக்கும் இடையிலான நெருக்கத்தை குறிப்பிடுவதே என்று நாம் கூற முடியுமா?

இதுதான் நோக்கமாகவும், நாட்டமாகவும் இருந்திருப்பின், அதனைக் கூறுவதற்கு ஏன் தயக்கம் காட்டியிருக்க வேண்டும். ஏன் இது, முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் பலயீனப்படுத்த வேண்டும்? அதுமட்டுமன்றி, அவர்கள் இருவருக்கும் இடையிலான நெருக்கம் என்ற அச்சம், ஒரு திசையில் சூரியனின் உஷ்ணமும், மறுபுறத்தில் பாலைவன சுடுமணலுமாக உள்ள கற்களடர்ந்த எரியும் பாலைவனப் பூமியில், தமது உடைகளின் ஓரங்களை பாதங்களுக்குக் கீழாகவும், சிலர் தலைக்கு மேலாகவும் பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில், வெறுமனே நபியவர்களுக்கும் ஹஸ்ரத் அலீக்கும் இடையிலான நெருக்கம் ஹாஜிகளை ஒன்று சேர்த்து வைக்கத் தகுதி பெறுமா?

'நான் யாருக்கெல்லாம் -மவ்லா- தலைவனாக, பொறுப்பாளனாக இருந்தேனோ, அவர்களுக்கெல்லாம் அலீ பொறுப்பாளராக இருப்பார்' என்று நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் கூறுவதற்கு முன், தாம் முஃமின்களுக்கு அவர்கள் ஆன்மாவை விடவும் உயர்ந்தவர் அன்னாரின் கட்டளைகளுக்கே அடிபணிந்தோம் என்ற விடயத்தையும் முஸ்லிம்கள் கூற வைத்தது எதற்காக.

நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள், ஹஸ்ரத் அலீ அலைஹிஸ் ஸலாம் அவர்களிடம் வழங்கிய விலாயத் எனும் பொறுப்பு, அல்லது தலைமைத்தவம் என்பது, நபியவர்களுக்கே உரிய சுயதலைமைத்தவமாகும் என்பதை தெளிவாகின்றது.

இந்த விலாயத், நட்பு ரீதியான நெருக்கமோ, அன்பின் பிரதிபலிப்போ இன்றிஅ து பொதவான, அனைத்துக்குமுரிய பூரண தலைமைத்துவமாக இருக்கின்றது. அது அன்பையும் இரக்கத்தையும் பொதிந்ததாக இருக்குமானர், நபியவர்கள் முஃமின்களிடத்தில் எப்போதும் இரக்கமுள்ளவர்க ளாகவும், அன்புள்ளவர்களாகவுமே உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹஸ்ஸான் இப்னு தாபித், நபிகளாருடைய அனுமதியுடன் கதீருடைய நிகழ்வை ஒரு கவிதையாக வடித்தார். ஹஸ்ஸானுடைய கவிதையில், ஹஸ்ரத் அலீயினுடைய விலாயத் பற்றியும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றோடு, அந்தக் கவிதையில், மௌலா என்ற சொற்பத்தின் விளக்கத்தை தவறாகக் குறிப்பிட்டதாகக் கூறிக் கொண்டு, எந்தவொரு எதிர்ப்பாளரும், அந்த பெருந்தொகையான கூட்டத்திலிருந்து மறுப்புத் தெரிவிக்க முன்வரவில்லை. மாறாக, அனைவரும் அந்தக் கவிதையைப் புகழ்ந்து மெச்சக்கூடியவர்க ளாகவே இருக்கின்றார்கள் அக்கவிதையிலிருந்து சில வரிகள்:

அவருக்கு நபி சொன்னார்,

அலீயே எழுந்திரும்,

நிச்சயமாக நான்

எனக்குப் பின் இமாமாகவும்,

வழிகாட்டியாகவும் உம்மைத் திருப்தி கொண்டேன்

எவருக்கெல்லாம் நான் தலைவராக இருந்தேனோ,

அவர்களுக்கு இனி இவரே தலைவர்

ஆகவே,அவரை உண்மையான பற்றுதலுடன் பின்பற்றி நடப்பீர்களாக.[12]

ஹஸ்ரத் அலீ அவர்களுக்குரிய இமாமத்தைச் சுட்டுவதாக, நபியவர்களின் கூற்றை ஹஸ்ஸான் விhவாக்கம் செய்கின்றார் ஹஸ்ஸான் அறிந்து கொண்டதை, நாம் இன்று அறிந்து கொள்வதையே விளங்கிக் கொண்டுள்ள அனைவலிருந்து ஒருவரும் இதனை மறுத்துரைக்க முன்வரவில்லை.

நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் தமது பிரகடனத்தை முடித்ததன் பின்னால், ஹஸ்ரத் அலீ அவர்களுக்கு பெண்கள் உட்பட அனைவரும் வாழ்த்துத் தெரிவிப்பதற்காகவும், அவர்களுக்கு ஸலாம் கூறி, அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்து கொள்வதற்காகவும் ஹஸ்ரத் அலீயை அமரச் செய்வதற்கென ஒரு கூடாரத்தை அமைக்குமாறு ஏவினார்கள்.[13] இந்த அம்சமானது, தலைமைத்தவம், கிலாபத்துடனேயே பொருந்திச் செல்லக்கூடியது என்பது தெளிவான விடயமாகும்.

நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் குறிப்பிட்டார்கள்: 'எனக்கு வாழ்த்துத் தெரிவியுங்கள். நிச்சயமாக அல்லாஹ், நபித்தவத்தின் மூலமாக என்னை சிறப்பாக்கினான். இமாமத்தின் மூலமாக எனது குடும்பத்தினரை சிறப்பாக்கினான்'[14]

இவ்வாறு, இந்த சான்றுகள் அனைத்தும் கதிருடைய ஹதீஸையும், அதில் எவ்வித ஐயத்திற்கும் இடமில்லை என்பதையும் தெளிவுபடுத்துவதை மதிப்புக்குரிய வாசகர்கள் காணமுடியும்.
________________________________________

[1]. பரீத் வுஜ்தி, தாயிரத்துழல் மஆரிப், பா.3,ப.542

[2]. அல் கதீர், பா.1, ப.9

[3]. காமில், ப.216, 278, 242.

[4]. தபரி, பா.3, ப.1171-73

[5]. பழாயிலுல் கம்ஸா, பா.1, ப.178-186

[6]. அல் கதீர், பா.1, ப.9-11

[7]. மே.கு., பா.1, ப. 60-64

[8]. அல் கதீர், பா.1, ப.166-174

[9]. மே.கு., பா.1, ப.198-199

[10]. மே.கு., பா.1, ப.14-61

[11]. அல் கதீர், ப.152-157

[12]. மே.கு., பா.2, ப.34-41

[13]. மே.கு., பா.1,ப.270-1

[14]. மே.கு., பா.1, ப.274