சினிமாவின் வலையில்

உலகலாவிய ரீதியில் இஸ்லாத்திற்கெதிரான போர் பல திசைகளிலும் திட்டமிட்டு நடாத்தப்படுகிறது. முஸ்லிம்களை எதிரிகள் அழிப்பது போதது என்று முஸ்லிம்களை முஸ்லிம்களே அழிக்கின்ற ஒரு திசையாக கொள்கை வெறிகளும் மூட்டுவதும். இரண்டாவதாக முஸ்லிம் நாடுகளிக்கிடையில் போட்டி பொறாமைகளை மூட்டுவதும். முன்றாவதாக தொலை தொடர்புகளால் மக்களை திசை திருப்பி நேரத்தை வீணடிப்பதுமாகும். கொள்கை பற்று இருக்கனுமே தவிர.ஒரு வரை ஒருவர் அந்நியனாக பார்க்கின்ற அந்த கொள்கை வெறியை முஸ்லிம்களிடம் உருவாக்கி தங்களுக்கு சண்டை நடைப்பதை இஸ்லாத்தின் எதிரி மிக பகிரங்கமாக கைதட்டி ரசிக்கின்றான்.


நாம் இங்கு பேச வரும் தலைப்பு தொடர்பாடலும், நவீனங்களும். தொடர்பாடல் விடயத்தை பயன்படுத்துவதில் முஸ்லிம்கள் பின்னடைவை நோக்கினாலும் அதனை தவறாக பயன்படுத்தி தங்களது இலக்கு (ஈமான்) இழக்கின்ற விடயத்தில் முஸ்லிம்கள் முதலிடத்தில் இருப்பது மிக கேவளமானது கவளைக்கறியது.

இந்த தொடர்பாடல் விடங்களை கொண்டு முக்கியமாக சினிமாவை பயன் படுத்தி எதிரிகள் இஸ்லாத்தை அழிப்பதில் மிக ரகசியமாக திட்டமிட்டு வெற்றி கரமாக செயற்படுகிறார்கள். சினிமாவின் வலையில் சிறியவர் முதல் பெறிவர்கள் வரை ஏன் உலமாக்கள் உட்பட சிக்கிருப்பதை காண முடிகிறது. ஏனைய மதங்களில் சினிமா கலை என்பது ஒரு தெய்வீக கலையாக நோக்கப்படுகின்றது. ஆனாலும் இஸ்லாத்தின் பார்வையில் இவை ஒரு பாவச் செயலாகவே பார்க்கப்படுகின்ற போதும் இஸ்லாமியர்கள் இதிலிருந்து விடுபட்டதே இல்லை. ஒவ்வொரு இஸ்லாமிய பிரச்சாரர்களும் சினிமா ஹாராம் என்று பல மேடைகளிலும் பயன்களிலும் ஜூம்மாக்களிலும் உரை நிகழ்த்தி இருக்கிறார்கள். உண்மையைச் சொல்லப்போனால் அதனூடாக பயன் பெற்றவர் பூச்சியமே. ஏன் உரை நிகழ்த்துகின்றவர்களே சந்தர்ப்பம் கிடைக்கின்ற போது அதில் சிக்கக் கொள்வதை நாம் உண்மை என்று நிரூபிக்கலாம்.

எனவே இந்த சினிமா கலை பற்றிய அறிவு இஸ்லாமிய மக்களிடம் இல்லாததே அதற்கான காரணம் எனலாம். இஸ்லாமிய கண்ணோட்டத்தில் கலைகளை வெறுக்க வில்லை தடுக்கவில்லை. ஆனால் அந்த கலை தக்வாவின் பார்வையோடு உம்மத்தின் நன்நோக்கங்களுக்காக செயற்பட்டால் அதனை ஆதரிக்க முடியும்.

நாம் உலகத்தில் இருக்கின்ற மனிதர்கள் பல உணர்வுகளை கொண்டவனாகவே இறைவன் படைத்திருக்கின்றான். அப்படியானவர்களை இங்கு நோக்கினால்

• சிலர் இருப்பார்கள் ஒரு விடயத்தை சொல்ல ஆரம்பித்தால் அதன் ஏனைய விடயங்களை விளங்கிக் கொள்வார்கள். மேலும் அதன் பின் விளைவுகள் நோக்கங்களையெல்லாம் புரிந்து கொள்வார்கள்.

• இன்னும் சிலர் இருப்பார்கள் ஒரு விடயத்தை ஒரு தடவைக்கு மேல் சொன்னால்தான் புரிந்து கொள்வார்கள்.

• இன்னும் சிலர் இருப்பார்கள் நாம் எதையோ சொல்லுவோம் அவர்கள் எதையோ புரிந்து கொள்வார்கள்.

• இன்னும் சிலருக்கு பல தடவைகள் ஒவ்வொன்றாக சொல்லி காட்டி அதன் செயற்பாடுகளை எமது சைகை மூலம் விளங்கப்படுத்த வேண்டும்.

• இன்னும் சிலருக்கு எப்படி சொல்லி விட்ட பிறகும் விளங்காதவர்களும் இருக்கிறார்கள்.

இப்படி பல வகை மனிதர்களுக்கு ஒரு விடயத்தை புரிய வைப்பதில் கற்றுக் கொடுப்பதில் தொலைத் தொடர்புகளை பயன்படுத்தி சினிமாவினால் உணர வைப்பது காலத்தின் வளர்ச்சி கண்ட நவீனங்கள் எனலாம். ஒரு விடயத்தை காட்சி மூலமாக கொடுப்பதனால் மிக எளிதாக புரிந்து கொள்வார்கள். அந்த எளிதான வேலையை சினமா செய்கிறது

எனவே இந்த பார்வையினூடாக சினிமாவை இஸ்லாம் நிச்சயமாக எதிர்க்க வில்லை. ஆனால் இஸ்லாத்தின் எதிரிகள் இந்த இலேசு புரிதல் வைத்தலை எளிதாக சிந்தனைக்கு நுளைத்தலை அவர்களுக்கு சாதகமாகவும் முஸ்லிம்களுக்கு எதிராக பயன்படுத்துகிறார்கள்.

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் பயந்தவர்கள்: வணங்குபவர்களில் அறிவுள்ளவர்கள்தான்.

பல இடங்களிலும் அல்லாஹ் அறிவுள்ளவர்களையும் சிந்திக்க கூடியவர்களையும் அல்லாஹ் பயந்து கொள்ளுங்கள் என்கிறான். எமது சமூதாயத்தில் பலர் எல்லாவற்றையும் உலமாக்கள் செயலை வைத்தே தாங்கள் நல்வழி போவதில் திருந்துவிதில் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவர் ஆலிமு செய்கிறாரே மௌலவி செய்கிறாரே நான் செய்தால் என்ன என்ற கேள்விகளே எழுப்பப்படுகின்றது.

ஒரு விடயத்தை யார் ஹாராம் என்று அறிந்தாலும் அதனை தடுத்து கொள்வதே எமது கடமை. அவர் செய்ய வில்லை இவர் செய்ய வில்லை என்று நாம் எம்மை அவமானப்படுத்தி கொண்டால் எமது முட்டாள்தனம். உண்மையில் உலமாக்கள் அறிஞ்சர்கள் சமூதாயத்திற்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு இல்லை என்று விட்டு நாமும் அவர்களைப் போல் இருப்பதை இஸ்லாம் அனுமதிக்காது.

ஓன்றை சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும் உலமாக்கள் மாத்திரம் சுவனம் நுழைவதில்லை. அவர்கள் மாத்திரம் நன்மை தீமை செய்வதை அல்லாஹ் பார்ப்பதில்லை . எல்லோரையும் அவன் பார்க்கின்றான் எல்லோருக்கும் அவரரவர் செய்த செயலுகாக கூலி நிச்சயம் வழங்குவான். ஆனால் அறிந்தவர்களுக்கு அவர்களுடைய தக்வாவின் பாவங்களின் படித்தரத்தை வைத்து நன்மை தீமை மடங்கு அதிகரிக்கப்படுமே அழிந்து போவதில்லை. உலமாக்கள் மாத்திரம் சுவனம் நுழைவார்கள் என்றால் ஏனையவர்கள் அனைவரும் நரகத்தில் அல்லாஹ் நுழைப்பான் என்பதில்லை.

யார் தங்களுடைய எந்த தொழிலாக எந்த செயற்பாடாக எந்த அறிவாக இருந்தாலும் அது தக்வாவின் அடிப்படையில் இருந்தால் நிச்சயம் அல்லாஹ் ஏற்றுக் கொள்வான். ஒரு வைத்தியர் தனது பதவியை அல்லாஹ்வுக்கு பொறுத்தமாக பயன்படுத்தி சம்பாதித்தால். ஒரு மீன் வியாபாரி, விரகு எடுப்பவன் மேசன் , என்ஜினியர் , எக்கவுன்டன் மேனஜ் மேன்ட யாராக இருந்தாலும் அவை அல்லாஹ்வின் திருப்தியை பெறுமா அல்லாஹ்வின் கோபத்தை பொறுமா என்பதை தீர்மாணித்து செயற்பட வேண்டும்.

உதாரணமாக ஒருவர் படிக்கிறார் லோயருக்காக படித்து அதனை அல்லாஹ்வின் பொறுத்தமின்றி உழைத்தால் அவருடைய தொழில் இறைவனால் வெறுக்கப்பட்டதாகும்.

நீங்கள் படியுங்கள் தேடுங்கள் உங்களது இறைவனுடைய அனுமதியோடு.

கொசு ஒன்றை உதாரணம் காட்டுவதை அல்லாஹ் வெட்கப்படுவதில்லை.

இதன் அடிப்படையில் சினிமா என்பது அது அல்லாஹ்வின் அனுமதிகளை பேணி அவனது தடுத்தலை பேணி நடைமுறைப்படுத்த படுமென்றால் அதை நிச்சயம் இஸ்லாம் வெறுக்காது. ஆனால் இன்றைய சினிமாக்கள் நிச்சயமாக அல்லாஹ்வின் திருப்தியை பெற்றதாக இருக்காது. இது இன்று பெண்களை ஒரு காட்சி பொருளாகவும் கவர்ச்சியாகவும் காட்டி உழைத்து சமூதாயத்தை அழிவுக்குள்ளே தள்ளிக் கொண்டிருக்கிறது. இதனை இஸ்லாமிய சமூதாயத்தில் இவை ஹாராம் என்று தெளிவாக சொல்லபட்ட அதிலிருந்து இன்னும் விடபடவில்லை. அதற்கான காரணம் என்ன?

ஒவ்வொரு வீடுகளிலும் அந்நியர்களின் சீனிமா ஆக்கிரமித்து இருக்கிறது. பெண்கள் ஆண்கள் தாய் பிள்ளைகள் என்று குடும் சகிதம் அதில் மூழ்கி கண்டு கழிக்கிறார்கள். வெட்கங்களை மறந்து கவர்ச்சி காட்டுபவர்களை கண்டு ரசிக்கிறார்கள். எமது ஒவ்வொரு வீடுகளிலும் தொடர் நாடகங்கள் எமது பெண்களை ஆட்டிப்படைத்திருக்கிறது. எது இல்லா விட்டாலும், தொடர் நாடகங்களுக்கு பெண்களிடம் கூடுதலான வரவேற்பை தொலைகாட்சிகள் பெற்று விட்டன. இவை நாளுக்கு மூழ்கி குர்ஆன் நபிளாரின் வரலாறு இஸ்லாமிய கோட்பாடுகள் என்னவென்று அறியாதவர்களாகவும்,அறிந்தவர்கள் அதை மறந்தவர்களாகவும் அதிலிருந்து தூரமானவர்களாகவும் போய் விட்டார்கள். இந்த அவல நிலைக்கு எது காரணம்? படித்த சமூகம் தொடக்கம் படிக்காதவர்கள் வரை செய்த குறைபாடகளே இவை.!!

ஒரு விடயத்தில் மூழ்கிய மனிதர்களை அதிலிருந்து பிரித்து எடுக்கப்பட வேண்டுமாயின் அவர்களுக்கு மாற்றீடான வழிகாட்டுதல்கள் தேவைப்படுகிறது. இந்த அனாச்சார கவர்ச்சி சினிமாவிலிருந்து இஸ்லாமிய சமூதாயத்தை காப்பாற்ற வேண்டுமாயின் அதற்கான மாற்று வழிகாட்டல் செய்யப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். எமது சமூதாயத்தில் ஒய்வு நேரங்களை எவ்வாறு பயன்படுத்துவது கழிப்பது என்ற வழிகட்டல் இது வரை இனங்கானப்பட வில்லை. அதனால்தான் இந்த சீரழிந்த சினிமாவுக்குள் உம்மா சிக்க இருக்கிறது.

மனிதன் என்பவன் களைப்படைய கூடியவன் 24 மணி நேரங்களையும் உழைப்பிலோ படிப்பிலோ தூக்கத்திலோ கழிக்க முடிவதில்லை. அன்றாட வேலைகளுக்கு அப்பால் ஓய்வு நேரங்ளை இஸ்லாத்தின் பண்புகளோடு தொடர்படுத்தி கொடுக்க வேண்டிய பொறுப்பு கல்வி சார்ந்தவர்களின் கடமை.

சிலர் சிந்திக்கலாமம் நபிகளார் அவர்களுடைய குடும்பத்தினர் தோழர்கள் ஒய்வு நேரங்களை எவ்வாறு பயன்படுத்தினார்கள்.?

இறை உள்ளங்கள் அவனை ஞாபகிப்பது கொண்டு மட்டுமே அமைதி பெரும். இந்த நிலை நபிகளாருக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் நேர்மையான தோழர்களுக்கும் இருந்தது. அந்த காலங்கள் இஸ்லாத்தை சூட்டோடு சூடாக பின்பற்றிய காலம். வஹி இறங்குவதையும் நபிகளாரின் வாழ்வையும் நேரடியாக கண்டு கேட்டு பின்பற்றினார்கள். அதே நிலை எமக்கு இல்லை. துரதிஷ்ட வசமாக இஸ்லாத்தில் பல பிரிவுகள் தோன்றி இருக்கின்றது படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை குழம்பி இருக்கிறார்கள். .நாம் இதை கல்வியறிவு மூலமாகவே சிந்தனையோடு ஆராய்ந்தே பின்பற்றி வருகிறோம். கல்வியறிவு இல்லாதவர்களுக்கு இந்த சினீமா நல்லதொரு ஆசானாக அமையும்.

மேலும் நபிகளாரின் அவர்களின் குடும்பத்தினரின் எளிமையான வாழ்க்கையை இன்னும் தூய்மையாக விளங்காகதன் காரணமே இஸ்லாமிய உம்மா இவ்வளவு சீரழிவுக்கு காரணமாகும். எனவே நபிகளாரின் வரலாற்று சரித்திரத்தை , அவர்களது பின் இஸ்லாமிய தலைமைத்துவத்தை சினிமா என்ற மீடியாவினால் சமூகத்தை ஒற்றுமையோடு ஒழுக்க மயமாக்கலாம். இஸ்லாத்தை தூய்மையாக பின்பற்றியவர்கள் அல்லாஹ்வையும் தூதரையும் சுவர்க்கம் நரகம் என்பதையே தங்களுக்குள் மயப்படுத்தி இருந்தார்கள். இன்றைய நவீன இயந்திர தொழில் நுட்ப சிந்தனைக்குள் சிக்கி இருப்பவர்களை அதைக் கொண்டுதான் இஸ்லாமிய மயப்படுத்த முடியும். அதனை சிந்தனைக்குள் புகுத்த வேண்டுமாயின் அதன் செயல் வடிவங்களை இவ்வாறுதான் என்று கலை காட்சியினால் கொண்டு வருதை நிச்சயமாக இஸ்லாம் வெறுக்காது. இறை உள்ளங்கள் அவனை ஞாபகிப்பது கொண்டு மட்டுமே அமைதி பெரும். என்ற இறைவாக்கை ஒவ்வொரு மனித உள்ளத்திலும் கொண்டு வரவேண்டுமாயின் முதலில் அந்த அசுத்தமான உள்ளங்களை சுத்தப்படுத்த வேண்டும். அந்த செயற்பாட்டை இஸ்லாமிய சினிமாக்களால் இலேசாக செய்ய முடியும். இறைவன் நபிமார்கள் மலக்குகள் இமாம்கள் தவிர்ந்த ஏனைய காட்சிகளை உருவப்படுத்தி ஒப்புவமை செய்வதில் கல்வி நோக்கம் வெற்றி பெரும்.

சினிமா ஒரு நல்ல மீடியா. ஜனங்களிடம் போய் எளிதாக சேர்கிற ஒரு மீடியா. மக்கள் மனசில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு மீடியா சினிமா. இந்தமீடியாவின் மூலமாக நாம் நினைத்ததைச் சொல்லலாம். எதிரிகள் அதனை நமக்கெதிராக பயன்படுத்துகிறார்கள்.. அதிலிருந்து சமூகத்தை காப்பற்ற வேண்டுமாயின் இஸ்லாமிய சினீமா மக்களிடம் தாக்கத்தை ஏற்றபடுத்த வேண்டும். இஸ்லாம் பெண்ணை பொருளாக பார்க்கவில்லை.பெண்ணின் உடல்வாகு வெளிப்படுத்தினால் அது கவர்ச்சியாக ஆணை ஈர்க்கும் காமப் பொருளாக மாறிவிடும் என்பதற்காக தான் அவள் முகங்களையும் கைகளையும் தவிர மற்றவற்றை மறைத்து அவளை பெண்ணாக உலகுக்கு காட்டுகிறது.

ஒரு காதல் சினிமாவைப் பார்த்து காதலில் ஆசை கொள்கிறான், ஒரு காமச் சினிமா பார்த்து காமக்கிருக்கனாக மாறுகின்றான், ஒரு விளையாட்டு வீரரை பார்த்து விளையாட்டில் ஆசை கொள்கின்றான். இஸ்லாமிய இறை நம்பிக்கையை தெளிவு படுத்துகின்ற வரலாற்று, படிப்பினை சினிமாவினால் ஏன் ஒருவர் அதில் ஆசை கொள்ள மாட்டார். நிச்சயமாக முடியும். அதனை எதிரிகள் சரியாக திட்டமிட்டு செயற் படுத்துகின்ற போது. ஏன் உண்மை சரித்திரங்களை படிப்பினைகளை எம்மால் இந்த சினிமா என்ற மீடியாவால் செய்ய முடியாது.?

சமூகத்தில் எத்தனையோ கலைஞசர்கள் இருக்கிறார்கள். இன்னும் எதிர் காலத்தில் இருப்பார்கள். ஏன் இவர்களினால் சீரழிந்த சினிமாவுக்குள் சிக்கி இருக்கும் சமூகத்தை காப்பாற்ற முடியாது. ஒரு அறிஞ்சன் அவனது அறிவுரையினால் திருத்துவான். ஒரு பொலீஸ் அவனது பலத்தினால் திருத்துவான் ஒரு அரசியல்வாதி அதிகாரத்தினால் திருத்துவான். ஒரு நீதிபதி சட்டத்தினால் திருத்துவார். ஒரு கலைஞன் அவனது கலைகளால் ஏன் திருத்த முடியாது?

யார் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் இந்த தொழில் நுட்ப சிந்தனைக்குள் மனிதன் சிக்ககிக் கொள்ள வேண்டிய துரதிஷ்ட நிலைக்கு உலகம் வெகு வேகமாக வளர்ச்சி கண்டு விட்டது. நூம் இந்த நுட்பங்களை பயன்படுத்தி ஒரு நல்ல இஸ்லாமியனாகவும் வாழமுடியும். அதற்கு மாற்றாக ஒரு ஷைத்தானிய மனிதனாகவும் இருக்க முடியம். விரும்பியோ விரும்பாமலோ நாம் இந்த தொழில் நுட்பங்களை மீடியாக்களை பயன்படுத்தி எமது ஒவ்வொரு வீட்டிலும் இஸ்லாத்தின் கதவுகளை தட்ட முடியும்.

இஸ்லாம் என்பது மறைவை நம்பிக்கை கொள்ள செய்கின்ற மார்க்கம் அதற்கு ஒப்பு ஒவமைகள் செய்ய முடியாதுதான். ஆனாலும் கல்வி நோக்கத்திற்காகவும் ஒரு அழிவிலிருந்து சமூகத்தை காப்பாற்றுவதற்காகவும் எமது இஸ்லாமிய வரலாற்றை,கோட்பாடுகளை ,காலாச்சார பாரம்பறிங்களை, ஒழுக்க பன்பாடுகளை மீடியாக்களால் தெளிவு படுத்தலாம்.

இன்றைய சீரழிந்த சினீமாக்கள் இருக்கின்போது ஈரான் இஸ்லாமிய குடியரசின் சினிமா முழுக்க முழுக்க இஸ்லாமிய மயப்படுத்தபட்டிருக்கிறது. கவர்ச்சிகளை தடுத்து கூடுதலான தனிக்கை முறைகளோடு சமூதாய நிலை உணரவைக்க கூடிய திறனை கொண்டிருக்கிறது. உலகலாவிய ரீதியில் பல அவாடுகளை உணர்வு ரீதியாக பெற்றிருப்பதை யாரும் மறுக்க முடியாது.

ஏன் இன்றைய இந்திய குறிப்பிட்ட சினிமா காட்சிகள் சில நல்ல விடயங்களை சுமந்து வருவதை நாம் ஒரு போதும் மறுக்க முடியாது. ஒரு கணவன் மனைவி பற்றி, குழந்தை வளர்ப்பு பற்றி, குடிபோதை பற்றி ,பெற்றோர்களை மதிப்பது பற்றி சில நல்ல விடயங்களையும் சொல்கிறது. இதை முழுக்க இஸ்லாமிய மயமாக இஸ்லாமியர்களால் ஏன் செய்ய முடியாது. குர்ஆனிய வசனங்களை மேற்கோல் காட்டி வரலாற்று ஆதராங்களை நிரூபித்து ஏன் இந்த விடயங்களை செய்ய முடியாது. மேற் சொன்ன நற்பன்புகளை ஏனைய மதங்களை விட இஸ்லாமிய மார்க்கம் அழகாக தெய்வீக கட்டளையாக இருக்கின்ற போதும் எத்தனை பேர் இன்னும் இந்த கொடுமைகளில் ஆளாகி இருக்கிறோம்.

நபிகளார் சொன்னார்கள் ஒரு தாயின் காலடியில்தான் சுவனம் இருப்பதாக இதை அத்தனை முஸ்லிம் மக்களும் சரியாக உணர்ந்து செயற்பட்டிருக்கிறார்களா? இந்த ஹதீத் பற்றிய தெளிவு மக்களுக்கு எவ்வாறு கிடைத்திருக்கிறது? குடி போதை தரக்கூடியது அதன் பின் விளைவு மிக ஆபத்தானது என்ற போதும் எமது முஸ்லிம் சமூதாயம் எவ்வாறு அதில் அடிமைப்பட்டிருப்தை நாம் நேரடியாக காணமுகிறது. இந்த நிலைகளை எல்லாம் சினிமாவினால் அழகாக செய்ய முடியும். உலகத்தில் கூடதலான விவாகரத்து நடைபெறுவதற்கு காரணமாக அமைவது இந்த குடிபோதைகளே!! இதன் பின் விளைவாக விபச்சாரங்களும், குழந்தை வளர்ப்பு கவனமின்மையும் அதிகிரித்து உலகம் எங்கு பார்த்தாலும் பாவங்கள் இருப்பதை ஒவ்வொரு நாளிலும் அறிகின்றோம். இவ்வாறான விளைவுகளை, பாதிப்புகளை மக்களின் மனங்களில் சொல்வதற்கு சினிமா என்ற மீடியா அழகான உபகரணம்.

இவ்வாறு பல விடயங்களை குறிப்பிடலாம். கணவன் மனைவி பிரச்சனைகளை தீர்த்தல், பெண்கள் வெளிநாடு சென்று கஷ்ட்டப்படுதல், கணவன் கஷ்ட்டப்ட்டு உழைத்து வீடு வருதல், அவனை ஆதரித்தல், பிள்ளைகளை வளர்த்தல், பிரச்சனைகளை சந்தித்தல், அதற்காக எதிர் நீச்சல் , எல்லா நிலைகளிலும் தக்வாவை விட்டு விடாதல், இஸ்லாமிய தலைமைத்துவத்தை கட்டுப்படுதல், சட்டங்களுக்கு தண்டனை வழங்குதல். போன்ற பல விடயங்கிளில் மக்கள் அறிவின்மையாக இருக்கிறார்கள். இதனையெல்லாம் ஒவ்வொருவரும் இலோசான காரியம் என்று கருதுகிறார்கள், கண்டும் காணாதவராய் போய் விடுகிறார்கள், எல்லா பிரச்சனைகளை தானும் உணர்;ந்தால் மாத்திரமே அதனை திருத்த முடியும். அந்த வேலையை சினிமாவினால் உணர்த்த முடியும்.

ஆயிரம் வார்த்தைகளை ஒரு காட்சி அழகாக வர்ணித்து விடும். அதுதான் மக்கள் மனங்களில் பதியவும் செய்யும்.

இன்று மீடியா என்பது பெரிய பெரிய ஜாம்பவான்களின் கைகளில் உள்ளது. அவர்களோடு நாம் போட்டி போடவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எனவே நமது நிகழ்ச்சிகள் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சர்வதேசத் தரத்தில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் நாம் மீடியாவில் நிலைத்திருக்கமுடியும்.

மீடியாவில் அவர்கள் எவ்வாறெல்லாம் சாதித்திருக்கிறார்கள் எஎன்பதை நாம் இன்று தெளிவாக உணர முடியும். எமது இளைஞர்கள்.யுவதிகள் என்று அந்நிய சினிமாவிலும் இன்டர் நெட் சாட்டிங்கிளும் பொண்ணான நேரத்தை வீணடித்து கொண்டிருக்கிறார்கள். பேஸ்புக்கினால் நாளுக்கு நாள் திருமணங்களும் உறவுகளும் மரணத்தை தேடிச் செல்கிறார்கள். எனவே நாம் எமது இஸ்லாமிய சமூதாயத்தை காப்பாற்ற நாம் அவர்களின் அன்றாட பொழுது போக்குகளுக்காக திட்டமிடவேண்டும். நாம் இதில் அக்கறை அற்றவர்களாக இருப்பதனாலேயே எதிரிகள் எமது சமூதாயத்திற்கு எதை எதையெல்லாம் திட்டமிட்டு கொடுத்து பொழுது போக்கு என வைத்திருக்கிறார்கள். இன்றை இளைஞசர் யுவதிகளிடம் பொழுது போக்கு என்ன என்று கேட்டால்: சட்டிங், லவ்பன்னி ரொட்டு சுத்துதல்,சினிமா றிங். கிலப் என்று நவீனமாக பேசுவார்கள். இந்த நிலையிலிருந்து சமூதாயத்தை காப்பாற்ற நாம் முயற்சி எடுக்க வேண்டும். இது இஸ்லாமிய சினிவாக இருப்பதிலும் தவறில்லை என்பதை விட காலத்தின் தேவையாகும்.



No comments: