வரலாறு கடந்த உண்மை

வரலாறு கடந்த உண்மை நிகழ்வுகளை சுமந்து வருகின்ற இந்த கவி வரிகள் நாமாக உருவாக்கிய வரலாறுகள் அல்ல. இதன் உண்மைகள் யாரையும் பாதிக்குமென்றாலோ போற்றுமென்றாலோ அது கவி வரிகளின் குற்றமுமல்ல, புகழுமல்ல. வரலாற்று ஆதரத்தையும் அது இங்கு தொட்டு நிட்கிறது. மேலும் இவை வரலாற்றாசிரியர்களின் தவறுகளாகவும் கணிப்பிட இடமில்லை.
 இந்த கவி வரிகளின் உண்மையான நோக்கம் யாரையும் புகழ்ச்சி இகழ்ச்சிக்கு உட்படுத்துவதல்ல. மாறாக இஸ்லாத்தின் நேர்வழியை பின்பற்ற தேடுகின்ற மனித ஏக்கத்தை உணர்ந்து அவர்களுக்கான தெளிவான பாதையாக இந்த கவி வரிகள் நடைபோடுகிறது. ஓன்றை பின்பற்ற பட வேண்டும் என இலக்குகள் உள்ளவைகளை ஆராயப்பட வேண்டிய பாரிய தேவை இருக்கிறது. அந்த தேடலின் போது அவைகளின் நல்லவைகள் தீயவைகள் வெளியாவது நிஜம். துரதிஷ்டவசமனது.



அவன் அரசாட்சிக்கே

நன்றி…

அவர் நுப்வத்தையே

நம்பி…

வாழ்கிறேன்,வாழ்த்துகிறேன்.



நபியின் குடும்பத்தினருக்கே

நாமங்களால் போற்றி

நல்லவர்களுக்கும்

நம்மவருக்கும் நன்மைகள்

நாட தேடுகிறேன்.



ஆண்மீகத் தேடலுக்கு

இந்த அறிவியல் சிந்தனையே

முதல் புத்தம்

அதை புரட்டுவதில்

புதியதொரு புரட்சி

சகோதரா நீயும் முயற்சி.



சிந்தி…

குர்ஆனை படி…

நபி பாதையை தேடு!!

நாம் யாரென அறிந்திடலாம்.



சிந்திப்பதே

ஒவ்வொரு மனிதனுக்கும்

இறைவன் கொடுத்த…

முதல் வேதம்

முதல் அருள்

முதல் அற்புதம்.



சிந்திக்காதவர்

குர்ஆனை படித்து

புலனடைவதில்லை.



நம்பிக்கை இல்லாதவர்

நபி வழி நடந்து

நல்லவராவதில்லை



நல்வழி நடந்து

நல்லது சொல்வதில்

தேவையுமிருக்கு நன்மையுமிருக்கு

அது எனக்கும்,உனக்குpருக்கு.



தவறு செய்யாதவரை

தவறு காண்பதில்

எனக்கு தேவை இருக்கா?

இல்லை இந்த

பேனாவுக்கு ஆசை இருக்கா?

வரலாற்றாசியர்களால்

தப்பாக்கி விட்டிருக்கா?



தவறு செய்யாதவரை

பழி சொன்னால்

இறையால் தண்டிக்கப்படுவதில்

எமக்கும் நம்பிக்கையுண்டு.

அவர்களுக்கும் இருந்திருக்கும்.



அப்படிருப்பின்

தேடல் இங்கு

தவறு செய்தவரை

தண்டிப்பதல்ல

தவறு செய்யாதவரின்

தலைமையில் வாழ்வதே!!

பழி சுமத்துவதுமல்ல

பரிசீலனை செய்வதே!!



தவறு செய்தவரை

மன்னிப்பதும்

முடியாது என்பதும்

எம் கடமையல்ல

காயப்பட்டவர்களின் கல்புடமை.



எம் உடமை

மறுமை வாழ்வுக்காக

தப்பானவரை

ஏற்க முடியாது என்பதே!!

“நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும்இ நேர்வழியையும் – அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் – யார் மறைக்கிறார்களோ நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான். மேலும் அவர்களைச் சபிப்பதற்கு உரிமையுடையவர்களும் சபிக்கிறார்கள்”. (2 : 159)



இல்லாதை இருக்கு

என்று சொல்லின்.

நானே எனக்கு

சாபமிடுவதில் சாட்சி.

நம்புகிறீரா?

நாய நபி வஹியை.

பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்’அல்குர்ஆன் 3:61

‘’யார் ஒர் நேர் வழியின் பக்கம் அழைக்கின்றாரோ அதைப் பின்பற்றுவோரின் கூலியைப் போன்று அவருக்கும் உள்ளது. அவர்களின் கூலியில் எவ்வித குறையும் ஏற்படுவதில்லை. யார் ஓர் வழிகேட்டின் பக்கம் அழைக்கின்றாரோ அதைப் பின்பற்றுவோரின் பாவங்களைப் போன்று அவருக்கும் உள்ளது. அவர்களின் பாவங்களில் எவ்வித குறையும் ஏற்படுவதில்லை’ (நூல்; புகாரி)



கிழக்கில் உதிக்கிற

சூரியன் மேற்கே உதித்திருக்கும்

அவன் நினைத்திருந்தால்



அவன் படைப்பதிலும்

பலசாலி

என்பதை நிருபித்ததான்.

உம்மையும் படைத்து.



திகைப்பை விரும்பாது

தெளிவாகச் சொல்கிறேன்.

என் தேடல்களை.



முற்றுப்புள்ளியிட்டான்

முஹம்மத் நபியுடனே

அவன் தூதுச் செய்திக்கு.



கூட்டத்திற்கு கூட்டம்

ஒவ்வொரு நபி கொடுத்தவன்

எம் நபியை

எமக்காக என்றுமே

வைத்திருக்கலாமல்ல.!!!



ஏதுமில்லாவுலகை

இவ்வளவு உருவாக்கியவனுக்கு

இது ஒன்று

முடியாத முயற்சியுமல்ல.



மீன் வயிற்றுக்குள் வாழ்ந்ததும்

குகைக்குல் தஞ்சமிருந்ததும்

வானுக்கு உயர்த்த பட்டதும்

உன் பாதுகாப்புதானே!!



இறiவா!!

உம்மத் ஒன்றுமில்லா

உலகை அழிக்கும்போதே

உம்மி நபியையும்

உலகை விட்டு

உன்னோடு எடுத்திருக்கலாம்தானே !!!



பாதிக்கப்பட்ட பாமரனின்

விரக்தி வினா இது!!



முஹம்மது (ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார். மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன். 33:40



இறைத்தூதர்

இறைபோன பின்னே!

இறை நேசர்

இல்லா பூவுலகை

அன்றே அழித்திருப்பான்

எதற்காக வைத்தானோ?



அவன் தெய்வீக கணக்கு

என்றும் பிழைத்தில்லை

சலைத்ததுமில்லை.

அவன் நீதிக் கொள்கை

அநீதிப்பதில்லை.



இன்னும் இவ்வுலகை

இமாமத்தில் இயங்கச் செய்வது

அவன் அரசாட்சிக்கு

அது இன்னுமொரு

ஆதாரம்…



பாமரரே !!

மீண்டும் படித்து பார்

இதுதான் விடை.



இதை நாமாக சொல்ல வில்லை

நல்லதொரு வசனமே சொல்கிறது.

'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் இறைவனைப் பயந்து கொள்ளுங்கள். இன்னும் உண்மையா ளர்களுடன் இருந்து கொள்ளுங்கள். (தவ்பா 119)



நம்பிக்கையை உள்ளத்தில்

முள்ளாக ஏற்றி

செயல்களால்

சொட்டுச் சொட்டாய்

நன்மை சேகரிப்போரே!!

நாம் யாரோடு இருக்கிறோம்.

எங்கே இந்த உண்மையாளர்?

காதிருந்து கேட்காதும்

கண்ணிருந்து பார்க்காதும்

உள்ளமிருந்து உணராதும்.

ஊனமுற்ற விலங்குகளா?

நாம்…



நான் ஏசவில்லை

இப்படியான எம்மை

அல்லாஹ்வே வீசுகிறான்.



மேலும் உண்மை யாதெனில். ஜின் மற்றும் மனித வர்க்கத்தில் பெரும்பாலோரை நரகத்திற்காகவே நாம் படைத்திருக்கின்றோம். அவர்களுக்கு இதயங்கள் இருக்கின்றன. ஆயினும். அவற்றால் அவர்கள் சிந்தித்துணர்வதில்லை; அவர்களுக்குக் கண்கள் இருக்கின்றன; ஆயினும் அவற்றால் அவர்கள் பார்ப்பதில்லை; அவர்களுக்குக் காதுகள் இருக்கின்றன. ஆயினும் அவற்றால் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் மிருகங்களைப் போன்றவர்கள்; ஏன் அவற்றை விடவும் அவர்கள் தாழ்ந்தவர்கள்! அவர்கள்தாம் அலட்சியத்தில் மூழ்கியிருப்பவர்கள். 7:179



நாங்கள் ஒவ்வொரு மனிதனையும் அவரவர் இமாம்களுடன் எழுப்போம் (இஸ்ரா 71)



வசனத்தில் வதந்திகளில்லை.

வாழ்வுக்குப் பின்

யாரோடு எழுப்படுவோம் என்பதில்

வழியில் உறுதி இருக்கிறதா?



அல்லாஹ் தஆலா எம் ஒவ்வொருவரையும் தங்களது இமாமுடன் எழுப்புவான் என்கிறான். அதனால் எமது இமாமை நாம் அறிந்திருக்க வேண்டுமல்லவா? இந்த வினாவுக்கு விடைதெரியாது நாம் மரணித்தால் எமது மறுமை வாழ்க்கை வேதனையாகிடும். அல்லாஹ் எனது நாயன் என்றும், நபி முஹம்மத் (ஸல்) என்றும் குர்ஆன் கிதாபு என்றும், கஃபா கிப்லா என்றும், முஸ்லிம்கள் உம்மத் என்றும் விடையளிக்கலாம். இமாமை யார் என்பது தெரிந்து கொள்வோம் தேடிக் கொள்வோம்.



பொருமான் பெற்றறிவை

குணித்து கொடுத்தார்கள்.

என் பிரதி நிதிகள்

பின் உள்ளவரை

இப்பூமி சுழலுமென்று…



என் குடுபத்திலிருந்து

குறையில்லா நிறையானவர்கள்

நியமிக்கப்பட்டு நிர்ணயிக்கப்படுவர்

12 பேர் என்று…



நாமாக சொல்ல வில்லை

நபிகளாரே சொல்லுகிறார்.

'மறுமை நாள் வரும் வரை அல்லது குறைஷிகளைச் சேர்ந்த பன்னிரண்டு கலீபாக்கள் உங்கள் மீது வரும் வரை இந்த மார்க்கம் நிலைபெற்றிருக்கும். (புஹாரி - பாக 3 - பக் 101இ திர்மிதீ - பாக 4 - பக் 50இ அபூதாவுத் - பாக 4 - கிதாபுல் மஹ்தி



சிற்றறிவு கொண்டதெல்லாம்

சிந்தனையுடையவர்தான்

அதற்காக…

எவர்களெல்லாம் இமாமாக முடியாது

பெற்றறிவும் பேரறிவும் கொண்டவரும்

பக்குவம் கண்டவருமே

தகுதியானவர்.



இவர்கள் குருதிக்குள்

குடி ரிஸாலத் கொண்டிருக்கும்



'இன்னும். இப்ராஹீமை அவரது இரட்சகன் பல கட்டளைகளைக் கொண்டு சோதித்த சமயத்தில் அவற்றை அவர் நிறைவு செய்தார் என்பதை நினைவு கூர்வீராக. நிச்சயமாக மனிதர்களுக்கு நான் உம்மை இமாமாக ஆக்குகின்றேன் என அல்லாஹ் கூறினான். அதற்கு அவர் என்னுடைய சந்ததியிலிருந்தும் (இமாம்களை ஆக்குவாயா?) எனக் கேட்டார். அதற்கு இறைவன் அநியாயக் காரர்களை எனது வாக்குறுதி சேராது எனக் கூறினான்.' (02: 124)



ஏ! குடும்பத்தினரே!

நிச்சயமாக சத்தியமாக

நான் உறுதியளிக்கிறேன்

உங்களை தூய்மை செய்வதையே

நீங்கள் அசுத்தமற்றவர்களாக

இருப்பதற்காக…

அடுத்தவர்களுக்கு

ஆசான்களாக படிப்பிப்பதற்காக…



சுத்தமென்றால் அது

அன்றாட சுத்தமல்ல

அந்தம் தொட்டு

ஆதி வரையுள்ள

மொத்தமான புண்ணிய சுத்தம்

புத்துணர் சுத்தம்

உண்மை உளச் சுத்தம்.

இதை நாமாக சொல்ல வில்லை

அல்லாஹ்வே சொல்லுகிறான்.

அஹ்லுல்பைத்தினரே! உங்களை விட்டும் சகல விதமான அசுத்தங்களை நீக்கிஇ உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் விரும்புகின்றான். (33:33)'



இமாம் திர்மிதி அம்ர் இப்னு அபீஸல்மா கூறியதாக அறிவிப்பது. ஆயதுத்தத்ஹீர் என்ற வஸனம் ஹஸரத் உம்மு ஸல்மா நாயகியின் வீட்டில் வைத்து இறைத்தூதருக்கு இறங்கியபோது ஹஸரத் பாத்திமா இமாம்ஹஸன் இமாம்ஹுஸைன் ஆகியோரை அழைத்து (அனைத்துக் கொண்டு) ஹஸரத் அலிக்கும் தன்பின்புறத்தில் இடம் கொடுத்து தனது போர்வையினால் எல்லோரையும் போற்றிவிட்டு இறைவனை நோக்கி (ஆதாரம்; ஸஹீஹ் முஸ்லிம் (நவவி) பாக:15 பக்:195)



புதல்வி பாத்தமா

பக்கமாக வரீர்

அலியே நீரும்

அருகே வரீர்

சுவனச் செல்வங்களே

ஹஸனும் ஹ_ஸைனும்

சுற்றி வரீர்

யாஅல்லாஹ் இவர்களே

என் அஹ்லுல் பைத்துகள்.



மனிதர்களே!!

இந்தப் போர்வைக்குள்

நடந்தது கனவு அல்ல

கேட்டுவிட்டு மறந்து விட



இவர்களே!!

போர்வைக்குறியவர்களும்

போற்றப்பட வேண்டியவர்களும்.

இதை நாமாக போற்ற வில்லை

நபிகளாரே போற்றி சொன்னார்கள்.

'இறைவா இவர்கள்தான் எனது அஹ்லுல்பைத்தினர். எனவே இவர்களைவிட்டு சகல வித அசுத்தங்களையும் நீக்கி தூய்மைப்படுத்தி சுத்தப்படுத்துவாயாக' என்றார்கள் உடனே ஹஸரத் உம்முஸல்மா அவர்கள் நாயகத்தை நோக்கி அல்லாஹ்வின் தூதரே நானும் அவர்களுடன் இருக்கின்றேனா? என வினவியதற்கு நீர் உமக்குள்ள இடத்தில் இருந்துகொள்ளும் ஆனால் நீர் நல்லோர்களில் உள்ளவராவீர் என்றார்கள். (ஆதாரம் திர்மிதி பாக-2 பக்- 290 ஹ 3787)



மனைவி நானும்

உள்ளே நுழைகிறேன்

போர்வைக்குள் புகந்த நேரம்.



உம்மு ஸல்மாவே

நீர் என்

மனைவி என்ற

மகிமையில் இருக்கிறீர்

என்று மறு சிறப்பளித்தவர்

நாமில்லை

நபிகளாரே சொல்லி செய்தார்கள்

இதை நாமாக சொல்ல வில்லை

நாயகி ஸல்மாவே சாட்சிளிக்கிறார்.

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ஹஸரத் உம்முஸல்மா நாயகி அறிவிப்பது:

'நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் பாத்திமாவை நோக்கி உனது கனவரையும் இருபிள்ளைகளையும் அழைத்துவாரும் என கட்டளையிட்டார்கள். ஹஸரத் பாத்திமா அவர்கள் மூவரையும் அழைத்துவந்து நிறுத்தினார்கள் உடனே ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் ஃபதக்குரிய போர்வையை அவர்கள் எல்லோருக்குமேல் போட்டு இறைவா! இவர்கள் முஹம்மதின் குடும்பத்தினர். எனவே உனது ஸலவாத்தையும் பரக்கத்தையும் முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தினர் மீதும் பொழிந்தருள்வாயாக! ஏனெனில் நீ மகா புகழுடையோனும்இ மகத்தானவனுமாவாய் என்றார்கள்'

உடனே நான் (உம்முஸல்மா நாயகி) அப்போர்வைக்குள் புகுந்து அவர்களோடு சேர்ந்து கொள்ள போர்வையை உயர்த்தினேன் உடனே நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் என் கையிலிருந்த போர்வையைப்பறித்து விட்டு நீர் நல்லோர்களிலிருப்பவர் என்றார்கள். (ஆதாரம் முஸ்னத் அஹ்மத் பாக-6 பக்-323)



ஜீவராசிகளே !!

ஜீரணித்தீரா?

இவர்கள் யாரோ !!!



நபியே !!

பலனற்று போயிடுமே

நீர் கண்ட பல துன்பங்கள்

பாதியில் விட்டு விட்டால்

அதற்காக…

நாம் இறக்கி வதைத்த

அந்த ஒன்றையும்

ஒப்பு வை.

இது எம் ஒப்புவமையல்ல

அல்லாஹ்வின் கற்ப்வியமை



தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்; (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால். அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராகமாட்டீர்; அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான்; நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான். 5:67.



ஹாத்தமுன் நபிக்கு

காப்புறுதி சொல்லி விட்டு

கட்டளாய் சொல்கிறான்

கடைசியாக சொல்லும் படி.



மனிதர்களே !!

சிந்திக்க மாட்டீரா?

நபி நாயன்

வஹி சொல்வதால்

வாள் வீசப்ட்டலாம்

வாய் ஏசப்படலாம்

என்றாலும் சொல்லும்

என்றானே எதற்காக?



தலைவனை சொல்வதில்

கிலாபத் கொடுப்பதில்

பிரதி நிதியை பிரசுரிப்பதில்

போட்டிகள் பொறாமைகள்

போங்கிடலாம் என்பதற்காக.



நான் தலைவனாக

இருந்த உம்மத்தே

தருகிறேன் உங்களுக்காக…



என் பிரதி நிதியை

அவரே அலி.



அனாதரவற்று போகாது நீங்கள்

ஆதரவுள்ளவர்களாக இருப்பதற்காக…

நாமாக செல்ல வில்லை

நபிகளாரே நமக்கும்

சொல்லச் சொல்லுகிறார்

வந்தவர்கள் வராதவர்களுக்கு

சொல்லும்படி…

நபியவர்கள் தமது இறுதி ஹஜ்ஜை முடித்து விட்டு வந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் கதீர்ஹும் எனுமிடத்தில் பல்லாயிரக்கணக்கான நபித்தோழர்களுக்கு மத்தியில் ஒரு பிரசங்கம் செய்தார்கள். அப்போது சொன்னார்கள்:

'மனிதர்களே! நான் உங்களை விடவும் உயர்ந்தவனில்லையா?' என்று வினவிய போது அவர்கள் அனைவரும் 'ஆம்' என்றனர். பின்பு சொன்னார்கள் 'எனவே எவருக்கெல்லாம் நான் தலைவராக இருந்தேனோ அவர்களுக்கு இனி தலைவராக வும் வழிகாட்டியாகவும் அலீ இருப்பார்.'

இந்த ஹதீஸ் பல வழிகளில் நபியவர்களிடமிருந்து அறிவிக்கப் பட்டிருக்கின்றது. இதை ஸஹாபாக்களில் 110 பேருக்கு அதிகமானவர்களும் தாபிஈன்களில் 84 பேரும் அறிவித்திருக்கின்றார்கள். சுமார் 360க்கும் அதிகமான பிரபல இஸ்லாமிய நூற்களில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. (ஆதாரம்) (ஸஹீஹ் முஸ்லிம் - பாக 4 - பக் 1873)





குர்ஆனை படித்து

இவரே உங்களை

பிடித்துக் கொள்பவர்

நீங்களும் பிடியுங்கள்.



நான் விட்டுச் செல்லும்

ஒளி விளக்குகள்

இவரால்தான்

ஓளி தொடரப்படும்.



நீங்கள் உங்களை

தட்டிக் கொண்டு

வினா தொடுத்தாலும்

குர்ஆனையும்

குடும்பத்தினரையும்

விட்டுக் கொண்டு

விரண்டோடிடாதீர்கள்.



விழிப்பாக இருங்கள்

குறிப்பாக எழுதி வையுங்கள்.



நான் இறை வேதம் (அல் குர்ஆனை)யும்இ அதனுடன் அது போன்ற ஒன்றையும் கொடுக்கப்பட்டுள்ளேன் ஆப+தாவூத்



வேதம் போன்ற

வேறென்றுமென்ன?

சுன்னா என்றிடலாமா?



சுன்ன என்ற பெயரில்

சுடமுடியுமானதை சுட்டு

தெளிவானதையெல்லாம்

தேவையற்றாக்கி விட்டார்களே!!

அப்படியானால்…

அதுபோன்றதல்லதானே!!



பொய்யர்களும்

முனாபிக்களும்

ஹதீதுகளில் போட்டியிட்டு

புகழிடம் தேடிக் கொண்டனரே!!

அப்படியாயின்…

அது போன்றதல்லதானே!!



குர்ஆனில் சந்தேகமே வர முடியாது

சுன்னாவில் சறுக்கல் நிறைய வருகிறதே

அப்படியாயின்…

அது போன்றதல்லதானே!!!



குர்ஆனுக்கு

விளக்கவுரை ஆசிர் தேவை

அதற்கு அறிவிப்பாசிரியர் தேவையில்லை

அதற்கு சரியாக

விளக்கமளிப்பவரே!!

அதுபோன்றதொன்று.



சுன்னாவுக்கு

நபியாசிரியர் தொட்டு

நம்மவர் வரை

உண்மையானவர் தேவை



அவர்களே !!

அது போன்ற ஒன்றானாவர்கள்.



அவர்களே அண்ணலின்

அழகிய குடும்பத்தவர்கள்.

அஹ்லுல் பைத்துகள்.



குழு குழுக்களாக

பிரிந்து கொள்ளாதீர்கள்

ஓன்று சேர்ந்து

அல்லாஹ்வின் கையிற்றில்

அணிதிரளுங்கள்.



குர்ஆனை அவனே படைத்தான்

அவனே பாதுகாப்பான்



எச்சரிக்கிறேன்

என் குடும்ப விடயத்தில்

நிதானமாக நடந்து கொள்ளுங்கள்

நியாயமாக இருந்து கொள்ளுங்கள்.



நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் நவின்றதாக ஸைத் பின் அர்க்கம் (ரழி) கூறுகின்றார்.

மனிதர்களே! நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் என்பதால் மிகக் கூடிய கெதியில் இறைத்தூதர் இஸ்ராயீல் அலைஹிஸ்ஸலாம் என்னிடம் வர உள்ளார் இறை அழைப்பை ஏற்று இவ்வுலகை விட்டு பிரிந்து அவன் அழைப்பிற்கு பதில் கூறவுள்ளேன். எனவே நீங்கள் வழிதவராமல் இருப்பதற்கு முக்கியமான இரு பொக்கிஷங்களை உங்கள் மத்தியில் விட்டுச்செல்கின்றேன். அதில் முதலாவது ஒளியும் நேர்வழியும் உள்ள அல்லாஹ்வின் வேதமாகும் அதில் உங்களுக்கு நேர்வழி உள்ளதால் அதை தன் வாழ்வில் ஏற்று நடந்து கொள்ளுங்கள். மற்றது எனது அஹ்லுல்பைத் எனது அஹ்லுல்பைத் விடயத்தில் அல்லாஹ்வை உங்களுக்கு ஞாபகமூட்டுகிறேன் என்று மூன்று முறை கூறினார்கள். (ஆதாரம்) (ஸஹீஹ் முஸ்லிம் - பாக 4 - பக் 1873)



மூன்று முறையாக

நாமாக முக்கியப் படுத்த வில்லை

நபிகளாரே முதன்மை படுத்தினார்கள்.



நானும் போய்விட்டால்

நிச்சயம் நீங்கள் வருவீர்கள்

நான் காத்திருப்பேன்

கௌதர் தடாகத்தில்



அவை இரண்டுக்கும்

இடைவெளி இருக்காது

நீங்கள் இவை இரண்டுக்கும்

இடையில் இருங்கள்.



சிப்பிக்குள்ளிருக்கும்

முத்தாக இருப்பீர்கள்.

அன்னைக்கும் தந்தைக்கும்

நடுவில் தூங்கும்

குழந்தை எப்படியோ!!

அதுபோல் இருப்பீர்கள்

இவை இரண்டுக்குமிடையில்.



சந்தேகம் சறுக்கலிட்டாலோ

துன்பங்கள் துரத்தி வந்தாலோ

இவைகளை பிரியாதிருங்கள்.



என் பிண்ணணியில்

உங்கள் பிழைகளுக்கு

விடையளிப்பவர்கள்

இவர்கள்தான்.





மனிதர்களே!!

குறையேதும் வைத்தால்

குற்றம் சொல்லுங்கள்

இதை நாமாக கேட்வில்லை

ரஸ_லுல்லாஹ்வே கேட்கிறார்



இல்லை யாரஸ_லுல்லாஹ்

இல்லை யாரஸ_லுல்லாஹ்

என்றவர்கள் நாமில்லை

அவர்களே சொன்னார்கள்.



இறைவா !!

சாட்சியாக சாட்டுகிறேன்

உன்னை நான்.



நாளை சாட்டிடுவார்கள்

நான் சமர்பிக்கலை என்று

இதை நாமாக சொல்ல வில்லை

நபிகளாரே கேட்டார்கள்.



சாட்சிக்கு சத்தியவாக்கிட்ட

இறைவன்

இறக்குகிறான் இறுதி வஹி



நபியே!

நாம் இன்று

பரி பூரப்படுத்திட்டோம்

பலமிகு இஸ்லாத்தை

இவையெல்லாம் உமக்காக…

இதை நாமாக சொல்ல வில்லை

இறை வஹியே சொல்கிறது.

''இன்றைய நாள் உங்களுக்காக உங்களது மார்க்கத்தை நான் பரிபூரணமாக்கி வைத்து விட்டேன். இன்னும் என்னுடைய அருட் கொடையை உங்கள் மீது முழுமையாக்கி விட்டேன். மேலும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன். (05:03)



புரிந்து கொள்ளாதவர்களை

விட

புரிந்து கொண்டு

பிரிந்து கொண்டார்களே

அவர்களே பாவிகள்.

இதை நாமாக சொல்ல வில்லை

அல்லாஹ்வே ஆட்சோபிக்கிறான்.

(நபியே!) அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசங்கொண்ட சமூகத்தினர் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டார்களே அத்தகையோரை நேசிப்பவர்களாக நீர் காணமாட்டீர். அவர்கள் தங்களது பெற்றோராயினும் அல்லது தங்களது பிள்ளைகளாயினும் அல்லது தங்களது சகோதரர்களாயினும் அல்லது தங்களது குடும்பத்தவர்களாயினும் சரியே. அவர்களது இதயங்களில் அல்லாஹ் ஈமானை எழுதிவிட்டான்.' (58:22) ளரசய அரதயவாயடய



நபியே!!

எற்றி வை என்று

எச்சரித்த இறை செய்தி…

அடுத்த நற்செய்தி…

இன்றே உம்மையும்

உம் தூதையும்

பூரணமாக்கி விட்டதாய்.

பூரிப்படைந்து புகழ்கிறது.



மனிதர்களே!!

சிந்திக்க மாட்டீரா!

எச்சரிக்கைக்கும்

அவாடுக்குமிடையில்

நடந்த அவசியம் என்ன?





இப் பதவி பல நேரம்

பரிந்துரை செய்தார்கள்

பரிணாமத் தூதர்.



கடைசி கட்டளையிட்டாரே

அதுவே முக்கியத்தில்

முதன்மை நிட்கிறது.



நேரம் வரும் போது

நெடுகில் சொல்வேன்.

ஏனைய நேரத்தையெல்லாம்.



நபிகளார் சொன்னதை

மறுத்தவர்களை நாம்

யார் என்று சொல்வது?



புரிந்து கொள்ளாதவரை விட

புரிந்து கொண்டு

பிரிந்து கொண்டவர்களை

சீதேவி என்று சொல்வதா?



அவர்கள் இதயங்களில்

இழிவான ஈமானை

அவர்களே எழுதி விட்டார்கள்.



அதனால் அவனும்

அதற்கு மேல் எழுதிவிட்டான்.



அது சில நேரம் அழியும்

உழி எழுத்தல்ல

அழியாத ஒளி எழுத்து.

அவனால் மட்டும் முடியும்.



நேரத்தில்…

தூது சொன்னதில்

துன்பங்கள் கடந்து விட்டேன்

துயரங்கள் சுமந்து விட்டேன்

அதற்காக …

நான் கேட்பது கூலியாக

என் குடும்பத்தாரை நேசிப்பதை.

இதை நாமாக கேட்க வில்லை

நபிகளாரே கேட்டார்கள்.



மனிதர்களே!!

நபி எதை கேட்டு விட்டார்

எத்தனையோ இருக்க

அத்தனையில் ஒன்றை கேட்டார்

தன் சந்ததியை சார்ந்து போவதை



கேட்டதும் அவருக்காகவா?

இல்லை அதுவும் நமக்காக அல்லவா!!



நபிகளார் கேட்டதைதான்

கொடுக்க முடியவில்லை

கேடு கொடுக்காமல்

வாழ்ந்திருக்கலாமல்ல.

வரலாறு வாழ்த்திருக்கும்

இதை நாமாக சொல்ல வில்லை

அவர்கள் ஆட்சிகளே சொல்கிறது.





கணவரே!

கண்படாது கப்ர் செய்திடுங்கள்.

அவர்கள் அருகதையற்றவர்கள்

என் கட்டையையும்

கடைசியாக காட்சிப்பதற்கு.

இதை நாமாக சொல்ல வில்லை

நாயகத்தின் மகளார்

பாத்திமாவே சொல்லுகிறார்.



சுவனத்தின் தலைவி

இப்படியொரு

வேண்டு கோள் விடுப்பதற்கு

விணை விதைத்தீர்களே

விணை அனுபவிப்பீர்கள்

பூமியில் விதைத்ததையெல்லாம்.



புரிந்து கொள்ளாதவரை விட

புரிந்து கொண்டு

பிரிந்து கொண்டவர்களே

அவர்கள்.



விட்டுக் கொடுத்தாலும்

வெட்டி எடுப்பதில்

பயன் படுத்திட்டார்கள்.



கருத்துக் பகிர்வில்

கொடூரங்களை கொள்ளையடித்து

ஏதோ ஒரு பக்கங்களை

படிக்க கொடுத்தார்கள்.



நேசத்தின் ஆதாரங்கள்

அழிப்பதில் பெருமை பேசி

கூடுதலான பக்கங்களை

கொழுத்தி சாம்பளாக்கிட்டார்கள்.



அரசு என்ற

அழிவு வாழ்க்கையில்

அவசர அவசரமாய்

ஆதங்கம் செலுத்தி

அதிகாரங்களில் அமர்ந்தார்கள்.



ஆட்சி என்ற

கதிரையில் குதித்து

அவர்களாகவே அமர்ந்து

ஆலோசிப்பது போன்று

அணி திரட்டினார்கள்.



நீங்களா நாங்களா?

என்ற களத்தில்

நாங்கள் என்றே

பேசினார்கள்



மறுமைக்காக வாழ்ந்தானால்

மௌனியாகி போய் விட்டார்கள்.

நீங்கள் மண்ணறைக்காக

வாழ்ந்தனால் மறுமையை

மறந்து விட்டீர்கள்.





யார் என்ன செய்தாலும்

இறையும் தூதும்

சரியாக நடந்திருந்தால்

சண்டைகள் ஏன் வரனும்?



இரண்டு பக்கத்திலும்

இறை பக்தி இருந்திருந்தால்

சிபீன் நகரவான்

ஏன் நடந்திருக்கும்?



ஓற்றுமையாய் வாழ்ந்திருந்தால்

ஓட்டகப் போர்

ஒரு தலை பக்கமாய்

ஏன் இறைவெற்றி கிடைத்திருக்கும்?





கல்புகளில் ஹதீதுகள்

நினைவிருந்தால்

கர்பலா களம்

கருணையற்று முரடுகள்

ஏன் காயந்திருக்கும்.?



நியாயப்படுத்த

நீங்கள் நினைப்பது தவறு!!!

இவைகளை நியாயம் என்றால்

எவைதான் அநீயாயம்?



இரவு என்பதிலும்

வெயில் இருப்பதில்

என்ன நியாயம்?



அப்படிருந்தால்

இரவு என்ற பெயரே

இல்லாது இருந்திருக்கும்.

இறைவன் படைப்பு

பலனற்று போயிருக்கும்.



இதையே இறைத்தூதர்

இவ்வாறு சொல்லுகிறார்.

என் குடும்ப விடயத்தில்

அல்லாஹ்வை ஞாபகமூட்டுகிறேன்.

என்று மேலும் மேலும் சொன்னார்களே

மீண்டுமொருமுறை மீலாய்வு செய்யுங்கள்



தூயவர்கள் பற்றி குறிப்பிட்ட

இறைவசனமும்

தூது எற்றி வைத்த

ஹதீதும்

இறையச்சம் அற்றவர்களுக்கிடையில்

இன்பமற்றுப் போனது.



உண்மையை நேசித்தவர்கள்

உள்ளங்களில் ஏற்றிக் கொண்டனர்.

பொய்மையை தேடியவர்கள்

உள்ளங்கையிலிருந்தவைகளை

ஊரறிய உதரி எரிந்தார்கள்



தான் என்ற தலைக்கணம்

தலையேறினால்

நாம் என்ற நிலைக் கிண்ணம்

தூள் தூளாகிடும்.

இதுவே இவர்கள் .



இது பழய பழிவாங்களா?

இல்லை புதிய

வலிவாங்களா என்று

அப்போதும் புரியவில்லை

அவர்களுக்கக்கு…

இப்போது புரியவில்லை

இவர்களுக்கு…

எப்போதோ ஒரு நாள் புரியும்.



உலக அதிஷம் ஒன்று

உங்களுக்கு தெரியுமா?

தெரிந்து கொள்ளுங்கள்

ஒரு உடலுக்கு

எத்தனை புதை குழிகள்

யாரால் யாருக்கு?



இமாம் அலியால்

தன் மனைவியின்

மரண ஆசையாக



சந்தர்ப்பம்

சந்திக்கும் இடத்தில்

சற்று தூரம் தருகிறேன்



இங்கு நேசமென்றால்

பாசம் மட்டும் கொள்வதல்ல

விசுவாசத்தோடு நேசம் கொள்வதே

நேசம் மட்டுமல்ல

அவர்களோடு நேர்வழி நடப்பதே

அவர்களை தொடர்வதையே

கேட்கச் சொல்வது நாமல்ல

நாயனின் வஹியே சொல்கிறது.







நேரத்தில்…

நபி மூஸாவுக்கு…

ஹாரூன் இருந்தது போல

அலி எனக்கிருக்கிறார்

இதை நாமாக சொல்ல வில்லை

நபிகளாரே சொன்னார்கள்.



பின்னர், நாம் மூஸாவையும், அவருடைய சகோதரர் ஹாரூனையும், நம்முடைய அத்தாட்சிகளுடனும், தெளிவான சான்றுகளுடனும் அனுப்பினோம் 23:45

நேரத்தில்;…

நபி நூஹ் கப்பலில்

ஏறியவர்கள் தப்பினார்கள்

என் குடும்ப வழியில்

என்னை சேராதவர்கள்

தப்பானவர்கள்.

இதை நாமாக ஒப்பாக்கவில்லை

நபிகளாரே ஒப்பித்தார்கள்.

'அபூதர் கஃப்பாரி (ரழி) அவர்கள் கஃபாவின் கதவைப் பிடித்தவராக மக்களை நோக்கிஇ என்னை எவர்கள் அறிவார்களோ! நல்லது அவர்கள் என்னை அறிந்துவிட்டார்கள் இன்னும் எவர்கள் என்னை அறியவில்லையோ நான் அபூதர் என்பதை தற்போது அறிந்து கொள்ளட்டும் என்று இயம்பி நாயகம் (ஸல் அவர்கள் கூறியதாக பின்வரும் ஹதீஸைக் கூறினார் .

எனது அஹ்லுல் பைத்திற்கான உதாரணம் உங்கள் மத்தியில் நூஹ் நபியின் கப்பலைப் போன்றது எவர் அதில் ஏறிக்கொண்டாரோ அவர் ஈடேற்றம் பெறுவார். எவர் அதில் ஏறிக்கொள்ளவில்லையோ அவர் மூழ்கடிக்கப்பட்டு நஷ்டமடைவார்'

ஹாகிம் இவ் ஹதீஸை ஸஹீஹானது என்கின்றார். (முஸ்தத்ரக் பாக 3 பக் 343)



இன பந்துகளுக்கு

விருந்நளித்து

இறை தௌஹீத்

சொல்லி விட்டு

யார் எனக்குதவி

தௌஹீத் சொல்வதற்கு

என்று

எதிர் பார்த்த நேரம்

எழுந்து நின்றான்

அபூ லஹப் எதிராக.

சாபமிட்டான்

நபிகளாருக்கு…



அப்போது

நபிகளாராக பிரிக்கவில்லை

அவனாகவே பிரிந்து கொண்டான்.

இறை சாபத்தோடு…



அந்த நேரம் அங்கு

எழுந்த எழிமையான

அலிக்கு ஆறுதல் கொடுக்கப்படுகிறது.

நேரத்தில்…



இவரே!

என் பிரதி என்று

இவரே

என் கலிபா என்றும்;

அப்போதும்

நாமாக கொடுக்கவில்லை

நபிகளாரே கொடுத்தார்கள்.

'அல்லாஹ்வின் நபியே! நான் இவ்விடயத்தில் உங்களுக்கு உதவியாளனாக இருப்பேன்;' என்றார்கள். பின் நபியவர்கள் ஹஸ்ரத் அலீயைச் சுட்டிக்காட்டிச் சொன்னார்கள்:

'நிச்சயமாக இவர் உங்கள் மத்தியில் எனது சகோதரரும் பிரதிநிதியுமாவார்.' (காமில் இப்னு அதீர் - பாக 2 - பக் 63 முஸ்னத் அஹ்மத் பாக 1. பக் 11இ இப்னு அபில் ஹதீத் - ஷரகு நஹ்ஜுல் பலாகா பாகஇ2.பக்.210இ மற்றும் வேறு பலரும் அறிவிக்கின்றனர்)



சிலைகளில் சிக்கிக் கொண்டு

சீர் தீரத்தமானவர் சிலர்

ஏதோ ஓர் நோக்கோடு

எட்டு வைத்தவர் பலர்



முஸ்லிமோடிருந்து

முனாபிக்கடித்தவர்கள்

அதில் சிலர்.



நபி முஹம்மதோடிருந்து

முதுகுக்கு பின்

மோசடி செய்தவர்

இன்னும் சிலர்.



முட்டி முறுகி

முடித்திட முடியாது

இணைந்திருந்து இன்பம்

தேடியவர் இன்னும் சிலர்



சிறப்புக்குறிய அலி

சிலைக்கு தலை சாய்க்க

சிருஷ்டியாக

சிறப்பிக்கப் பட்டவர்

“கர்ரமல்லாஹ் வஜ்ஹஹ_ என்று



நாமாக சொல்ல வில்லை

அவர்களாகவே சொன்னார்கள்.

ஆனாலும்

அவர்களாகவே அவமதித்தார்கள்



ஆண்களில் தௌஹீதை

ஏற்ற முதல் மனிதன்

அலி என்பதை

நாமாக சொல்ல வில்லை

வரலாறே வாழ்த்துகிறது.



நேரத்தில்…

குறிப்பாக குறிக்கிறது குர்ஆன்

அலியின் விலாயத்தை



ஏ மனிதர்களே!!

உங்கள் பொறுப்புடையார்

நீங்கள் அவருக்கு மறுப்புபடையார்.

யார் என்று அறியுமா?



அவரே ஓரே நேரத்தில்

இரண்டு கடமை செய்தவர்

என்னை பணிந்த நிலையிலும்

என்னை குனிந்த நிலையிலும்

பகிஷ்கரிக்காது பரிளித்தவர்

எனக்காக ஸகாதும் கொடுத்தும்.





அவனை தரிசிக்கையில்

தானம் கொடுத்து

தகுதி பெற்றவர்

உம்மத்தின் வலி என்றால்

அது அலி தவிர

யார் இருக்கு?









அலியை நபிகளார்

தலைவராக நியமித்த நேரத்தில்

நீர் சிறப்புக்குறியவர்

உமக்கு சோபனம் உண்டாகட்டும்

என்று வாழ்த்தி விட்டு

புரிந்து கொண்டு

பிரிந்த கொண்டவர்களை

நாமாக பிரிக்க வில்லை

அவர்களாகவே நபிகளாரை

பிரிந்து விட்டார்கள்.



உகத் போரில்

பின் முதுகு காட்டி ஓடியதை

எச்சரிக்கப்படுகிறதே

அதை நாம் எச்சரிக்க வில்லை

அவர்களை அல்லாஹ்வே

எச்சரித்து விட்டான்.

இதை நாமாக சொல்ல வில்லை

குர்ஆனே சொல்கிறது.



இதற்கு முன் புரியாதவர்களே

இனிமேலாவது புரிந்து கொள்ளுங்கள்.



நேரத்தில்…



மரண நேரத்தில்

மனிதர்களே நான்

இரண்டு விடயத்தை

சொல்ல போகிறேன்

எழுதிக் கொள்ளுங்கள்.

இதை நாமாக கேட்க வில்லை

நபிகளாரே கேட்டார்கள்.



இல்லை இல்லை

நபிகளார் மரணத்தில்

வாய் உழருகிறார்

கொடுத்திடாதீர்கள்

என்று தடுத்தவர்கள்

நாமில்லை.

அவர்களாகவே சொன்னார்கள்.



இல்லை இல்லை

நபிகளார் கேட்பதை

கொண்டு வருங்கள்

அவர் சொல்லுவதை

எழுதுங்கள் என்று

தவித்தவர்கள் நாமில்லை

அஹ்லுல் பைத்துக்களே

சொன்னார்கள்.



கொடுப்பது

அவசியமென்றும்

அவசியமற்றது என்று

அங்கு வாக்குவாதப்பட்டவர்கள்

நாமில்லை

அவர்களே செய்தார்கள்.

'உங்களுக்கு ஒரு விடயத்தை எழுதுவதற்காக.என்னிடம் ஏதாவது ஒன்றை (எழுது கோலும் ஓலையும்) கொண்டு வாருங்கள். அதன் பிறகு நீங்கள் ஒரு போதும் வழிதவற மாட்டீர்கள்' எனக் கட்டளை பிறப்பித்தார்கள். அங்கிருந்த சிலர் நபியவர்களுடைய கட்டளையைப் புறக்கணித்து அவர்களுக்கு எழுதுவ தற்கான பொருளைக் கொடுப்பதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டனர். அது மாத்திரமின்றி மிகவும் கீழ்த்தரமான வார்த்தை களை உபயோகித்து தடுத்துவிட்டனர் என இந்த ஹதீஸின் தொடரிலே குறிப்பிடப்படுகின்றது. (புஹாரி - பாக 5 - பக் 11 நபியின் நோய் பற்றிய பிரிவு இதை விடத் தெளிவாக ஸஹீஹ் முஸ்லிம் - பாக 3இ பக் 1259ல் குறிப்பிடப்பட்டுள்ளது.



கோபமுற்றவர்

என் பக்கத்தில்

நிட்க வேண்டாம்

என்று தடுத்தவர்கள் நாமில்லை

நபிகளார்தான் சொன்னார்கள்.



இரண்டு கட்டளையில்

முதன்மைக்கு நபிகளார்

உழருகிறார் என்றும்

இரண்டாவது ஏவலுக்கு

நபிகளார் பணிக்கிறார் என்றும்

நிறைவேற்றியவர்கள் நாமில்லை

அஹ்லுல் பைத்துமில்லை

அவர்களே புரிந்த கொண்டு

பிரிந்து சென்றார்கள்.



அவர் பேசுவதெல்லாம்

இறை வஹி

அதைத் தவிர

அவர் ஏதும் பேசுவதில்லை

என்று நபிகளாரை

சிறப்பை கூறுவது

நாமில்லை

அது வஹியே கூறுகிறது.



இதை புரிந்து கொண்டு

நபி உழருகிறார் என்றவர்

புரிந்து கொண்டு

அவராகவே பிரிந்து செல்கிறார்.



பிரிந்து நின்று

குர்ஆன் மட்டும் போதுமென்றால்

அவர்களே பிரிந்து கொள்கிறார்கள்

நபிகளாரை விட்டு



நாம் பிரிப்பதென்பது

பிழையான கருத்து

நாம் பிரிக்கவில்லை

அவர்களாகவே பிரிந்து கொண்டார்கள்.



தகுதியற்ற தலைமை என்று

நாமாக அவர்களை மறுக்க வில்லை

அவர்களே தகுதியான

இமாம் அலியை மறுத்தார்கள்.



முன்னே பின்னே

வரச் சொன்னேனே!!!

வருகிறது சந்தர்ப்பம்.



பாத்திமா என் ஈரல்

அவரை நோவினை செய்பவர்

என்னையும்தான்

என்னை நோவினை செய்தவர்

அல்லாஹ்வையும்தான்

என்பதை நாம் கூறவில்லை

நபிகளாரே எச்சரித்தார்கள்.



ஈரலான பாத்திமாவை

நோவினை செய்து

நாம் பிரிக்கவில்லை.

அவர்களாகவே பிரிந்து கொண்டார்கள்



பரிசளித்த பதக்கை பரித்து

அவர்களாகவே பாவியாகி விட்டார்கள்

நாமாக பிரிக்கவில்லை

அவர்களாகவே பிரிந்து கொண்டார்கள்.



பாத்திமா பரிதாபமாக கேட்கிறார்

ஏ மனிதர்களே!

நான் யார்

என்று தெரிந்துமா?

இக் கொடுமைகள்.



நான் சுவனத்தலைவியாக இருந்தும்

உங்கள் இதயங்கள் சுட்டெரிக்கவில்லையா?

வேதனை செய்வதில் எனக்கு



நபிகளாரின் புதல்வியாக இருந்தும்

உங்கள் நாவுகளில்

குர்ஆன் எழவில்லையா?



நபிமார்களின் அநாந்தரமென்று.

இவைகளை புரிந்து கொண்டு

பிரிந்து கொண்டவர்களே பாவிகள்.



ஏ மனிதர்களே!

நாங்கள் யார் தெரியுமா?

இல்லாதபோதும் இருப்பதை

இறைவனுக்காக கொடுத்து

இறை வசனத்தால் வாழ்த்தப்பட்டவர்கள்.



எங்களிடம் பதக் இருந்தால் என்ன?

படைத்தனைத்தும் இருந்தாலென்ன?

ரிஸாலத் பாசறையில்

பக்குவப்பட்ட எங்களுக்கு

படைத்தவனுக்காக கொடுப்பதில்தான்

பலசுகமிருக்கு



பதக் மட்டும் எப்படி

பாவமாகி விடும்

எங்களிடமிருந்தால்.



நீங்கள் பயப்பட்டது

பதக்கினால் பரிகாரம் கிடைத்திடுமென்று

மக்கள் இமாத்தில் இணைவதில்.

இவைகளை

புரிந்து கொள்ளாதவரை விட

புரிந்து கொண்டு

பிரிந்து கொண்டார்களே

அவர்கள் சீதேவிகளா?



சாட்டு சொல்லி வெல்வதென்றால்

அசத்தியத்தையும் சாட்டுச் சொல்லி

சத்தியமாக்கிடலாம்

இறை வசனம் இப்படிருக்க

இவ்விடத்தில் இஜ்திஹாத்துக்கு

என்ன தேவையிருக்கு?



என்னில் உள்ளவர் ஹ_ஸைன்

நான் அவரில் உள்ளவர்

என்பதை புரிந்து கொண்டும்

பிரிந்து நின்று

பிணக்குகள் ஏற்படுத்தியவரை

பிரியர்கள் என்று சொல்வதா?





ஹஸன்,ஹ_ஸைன்

சுவனத்து தலைவர்கள்

தலைவர்களாக ஏற்க மறுத்து

அவர்களாகவே பிரிந்து கொண்டார்கள்

நாமாக பிரிக்க வில்லை.



அறிவின் வாயல்

அலியின் விலாயத்தை ஓரப்படுத்தி

அவர்களாகவே ஓரமாக்கிக் கொண்டார்கள்

நாமாக ஒதுக்கவில்லை.



தெளிவில்லாத மார்க்கத்தீர்ப்பளித்து

அவர்களாகவே மாட்டிக் கொண்டார்கள்

நாமாக அவர்களை மாட்டி விடவில்லை.



அலி இல்லை என்றால்

அழிந்திருப்போம் என்று

அவர்களாகவே தங்கள்

அறியாமையை சொன்னார்கள்.

நாமாக சொல்ல வில்லை.



நபிகளார் காலத்தில்

ஹலாக இருந்த

முத்தஅஃ வை ஹராமக்கியது

நாமாக செய்ய வில்லை

அவர்களாகவே செய்தார்கள்

அல்லாஹ்வும் அவனது தூதரும் யாதொரு காரியத்தை முடிவெடுத்து விட்டால் அவர்களுடைய அக்காரியத்தில் சுயமாக வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு விசுவாசியான எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை. அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் எவர் மாறு செய்கிறாரோஅவர் பகிர ங்கமான வழிகேட்டில் திட்டமாக வழிகெட்டு விட்டார்." (33:36)



நபிகளார் நாடு கடத்திய

துரோகிகளை அழைத்து

கவர்னர் பதவி கொடுத்ததை

நாமாக சொல்ல வில்லை

அவர்கள் ஆட்சியே சொல்கிறது.



பைத்துல் மஆலில்

தங்கள் குடும்பத்தினருக்கு

அள்ளி கொடுத்ததை

நாம் சொல்ல வில்லை

அவர்கள் வரலாரே சொல்கிறது.



ஹைபரில் முன் சென்று

பின் முதுகு கட்டி

அவர்களாகவே வந்தார்கள்

எங்களால் வீரமில்லை என்று



நேரத்தில்

ஹைபரின் கதவை…

பிடித்து எதிரிகளை

எதிர்த்து வெற்றி

வீரம் பெற்ற அலியை

இவரே

என் பிரதி நிதியாக

நியமித்தது

நாமாக பிரதிநிதியாக்கவில்லை.

நபிகளாரே பிரகரனப்படுத்தினார்கள்.



தலைமைக்கு தகுதியான

இமாம் அலியை பின்தள்ளி

தகுதியற்ற தலைமைக்கு

தாங்களாகவே நியமித்து கொண்டார்கள்.



நபிகளார் காலத்தின்

அதனிலிருந்து “அமலை” மாற்றி

“நவ்மை”;. நாமாக மாற்ற வில்லை.

அவர்களாகவே மாற்றிக் கொண்டார்கள்





நேரத்தில்…

வாருங்கள் வாக்குவாதபட்டு

நிரூபிப்போம்

இஸ்லாமா? கிருஸ்த்தவமா என்று?

நீங்களும் வாருங்கள்

நாங்களும் வருகிறோம்

உங்களது பிள்ளைகளையும்

எங்களது பிள்ளைகளையும்

அழைத்து வாருங்கள் என்ற

வஹி இறங்கிய போது

பெருமானார் அழைத்துச் சென்றது

அவர்களையல்ல

அஹ்லுல் பைத்துகளை.



அந்த அறிவுக் கூட்டத்தை

அவமதித்து ஆட்சிக்கு அமர்ந்தவர்கள்

நாமில்லை

அவர்களே செய்தார்கள்.



இதை நாமாக சொல்ல வில்லை

நபி வழிகாட்டுதலே சொல்கிறது.



(நபியே!) இதுபற்றிய முழு விபரமும் உமக்கு வந்து சேர்ந்த பின்னரும் எவரேனும் ஒருவர் உம்மிடம் இதைக் குறித்து தர்க்கம் செய்தால்: 'வாருங்கள்! எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும். எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும் எங்களையும் உங்களையும் அழைத்து (ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு) "பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்" என்று நாம் பிரார்த்திப்போம்!" என நீர் கூறும். 3:61

நீங்கள் உங்களது பிள்ளைகளையும் நாம் எமது பிள்ளைகளையும் கொண்டு வருவோம் என கூறுவீராக என்ற வசனம் இறங்கிய போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் ஹஸரத் அலி பாத்திமா ஹஸன் ஹுஸைன் ஆகியோரை தன் அருகே ஒன்று கூட்டி இறiவா இவர்கள் தான் எனது அஹ்லுல் பைத்துக்கள் என இயம்பினார்கள். (ஆதாரம் முஸ்லிம் (இமாம் நவவி) பாக-15 பக்-176)



இவையெல்லாம்

எங்கள் கிரந்தங்களில் உள்ள

அந்தரங்கங்கள் அல்ல

உங்கள் கிரந்தங்களிலுல்ல

ஆதாரங்கள்.



எங்களிடம் எங்களுக்கு

நிறைய ஆதரங்கள் இருக்கிறது

உங்களுக்கு உங்களில் இருந்தே

எங்களுக்கு ஆதரமாய் இருப்பதுவே

அசைக்க முடியாத ஆதாரம்.



கறைகளை நீக்க

காலம் இடம் கொடுக்காது

காயப் பட்டவர்களே

கருணை காட்ட வேண்டும்.





''மார்க்கத்தில் எத்தகைய நிர்ப்பந்தமும் கிடையாது. ஏனெனில் வழிகேட்டில் இருந்து நேர்வழி தெளிவாகி விட்டது.

(02:256)



''இன்றைய நாள் உங்களுக்காக உங்களது மார்க்கத்தை நான் பரிபூரணமாக்கி வைத்து விட்டேன். இன்னும் என்னுடைய அருட் கொடையை உங்கள் மீது முழுமையாக்கி விட்டேன். மேலும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன்.

(05:03(



அன்றியும் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனைவிட – அல்லது தன்னிடம் சத்தியம் வந்த போது அதைப் பொய்ப்பிப்பவனைவிட அநியாயம் செய்பவன் யார்? (இத்தகைய) காஃபிர்களுக்கு ஒதுங்குமிடம் நரகத்தில் அல்லவா இருக்கின்றது” – அல்குர்ஆன் 29 : 68

இறைவனின் தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும் யார் தங்களுக்குள் பிரிவை உண்டு பண்ணிக் கொண்டு மாறுபாடாகி விட்டார்களோ அவர்கள் மாதிரி ஆகி விடாதீர்கள். அத்தகையோருக்குக் கடுமையான வேதனையுண்டு. (குர்ஆன் 3:105)

“எவர்க் தங்களுடைய மார்க்கத்தைத் தம் (விருப்பப்படி பலவாறாகப்) பிரித்துஇ பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை; அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்” (6 : 159)

“அவர்களுக்கு (மார்க்க) விஷயத்தில் தெளிவான கட்டளைகளையும் கொடுத்தோம்; எனினும் அவர்களுக்கிடையே உண்டான பொறாமையினால் அவர்களுக்கு (வேத) ஞானம் வந்த பின்னரும் அவர்கள் அபிப்பிராய பேதம் கொண்டார்கள்; நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் எதில் அபிப்பிராயபேதம் கொண்டிருந்தார்களோ அதில் கியாம நாளில் அவர்களிடையே தீர்ப்புச் செய்வான்”. (45 : 17)

“நிச்சயமாக உங்கள் ‘உம்மத்து’ சமுதாயம் – (வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம் தான்; மேலும் நானே உங்கள் ரப்பு: ஆகையால் என்னையே நீங்கள் வணங்குங்கள்.

ஆனால் (பிந்தைய சந்ததியர் தங்கள் மார்க்கக் காரியத்தில்) பிளவுண்டு (பல பிளவுகளாகப்) போயினர் (ஆனால் இறுதியில்) இவர்கள் யாவரும் நம்மிடையே மீள்பவர்களாக இருக்கிறார்கள்”. (21 : 92இ 93)

“நிச்சயமாக இதுவே (குர்ஆன்) என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள். இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் – அவை உங்களை அவனுடைய வழியை விட்டுப் பிரித்து விடும்; நீங்கள் (நேர்வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்குப் போதிக்கிறான்” (6 : 153)

“இன்னும் அல்லாஹ்வின் பால் நேரான பாதை இருக்கிறது. (அவனருளை அடைய முடியாத) தவறான பாதைகளும் இருக்கின்றன; மேலும் அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் நிச்சயமாக நேர்வழியில் சேர்த்து விடுவான்” (16 : 9)



No comments:

Post a Comment

முஹர்ரம் மாதத்தின் மறுமலர்ச்சியும் மறுக்கப்படுப் படும் எழுற்சியும்